• Sep 08 2024

நிதி நெருக்கடி - அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

Chithra / Jan 16th 2023, 12:57 pm
image

Advertisement

அரச நிறுவனங்களில் நிறைவேற்று தர அதிகாரிகள் மற்றும் சாதாரண அதிகாரிகளின் சம்பளத்தை மாதத்தில் இரண்டு வெவ்வேறு தினங்களில் இரண்டு கட்டமாக வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.

நாட்டின் நிதி நெருக்கடியை கவனத்தில் கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இதற்காக நிறைவேற்று தர அதிகாரிகள் மற்றும் சாதாரண அதிகாரிகளின் சம்பளத்தை வெவ்வேறு தினங்களில் வழங்கும் வகையில் பணத்தை வெளியிடுவதற்கு தேவையான தகவல்களை வழங்குமாறு திறைசேரியின் நடவடிக்கை திணைக்களம் அரச நிறுவனங்களின் பிரதான நிதி அதிகாரிகள், கணக்காய்வாளர்கள், நிதிப் பணிப்பாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், அரச ஊழியர்களுக்கான சம்பளம் மாதந்தோறும் இருவேறு தினங்களில் இரண்டு கட்டமாக வழங்கப்படவுள்ளது. 

நிதி நெருக்கடி - அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் அரச நிறுவனங்களில் நிறைவேற்று தர அதிகாரிகள் மற்றும் சாதாரண அதிகாரிகளின் சம்பளத்தை மாதத்தில் இரண்டு வெவ்வேறு தினங்களில் இரண்டு கட்டமாக வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.நாட்டின் நிதி நெருக்கடியை கவனத்தில் கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.இதற்காக நிறைவேற்று தர அதிகாரிகள் மற்றும் சாதாரண அதிகாரிகளின் சம்பளத்தை வெவ்வேறு தினங்களில் வழங்கும் வகையில் பணத்தை வெளியிடுவதற்கு தேவையான தகவல்களை வழங்குமாறு திறைசேரியின் நடவடிக்கை திணைக்களம் அரச நிறுவனங்களின் பிரதான நிதி அதிகாரிகள், கணக்காய்வாளர்கள், நிதிப் பணிப்பாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.இதனடிப்படையில், அரச ஊழியர்களுக்கான சம்பளம் மாதந்தோறும் இருவேறு தினங்களில் இரண்டு கட்டமாக வழங்கப்படவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement