• May 19 2024

கடன் மறுசீரமைப்பின் போது நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு !samugammedia

Tamil nila / May 5th 2023, 6:39 am
image

Advertisement

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடரின் போது, ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட  சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர், கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கையில் அதிகரித்திருந்த பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ள போதும், நிதிக் கொள்கைகள் ஊடாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். 

கடனை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருதல், இலங்கையில் காணப்படும் பாரிய சவால் என குறிப்பிட்டுள்ள அவர், 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள தீர்மானித்தால், நாட்டின் நிதி ஸ்திர நிலைமையை பாதுகாக்கும் வகையிலேயே அதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பின் போது நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு samugammedia உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடரின் போது, ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட  சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர், கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.இலங்கையில் அதிகரித்திருந்த பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ள போதும், நிதிக் கொள்கைகள் ஊடாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். கடனை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருதல், இலங்கையில் காணப்படும் பாரிய சவால் என குறிப்பிட்டுள்ள அவர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள தீர்மானித்தால், நாட்டின் நிதி ஸ்திர நிலைமையை பாதுகாக்கும் வகையிலேயே அதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement