• Feb 06 2025

சமையல் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து! திருமலையில் சம்பவம்

Chithra / Feb 6th 2025, 9:30 am
image


திருகோணமலை, தோப்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (05) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர் சமையல் எரிவாயுவினை பொருத்திக் கொண்டிருந்த போது சமையல் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ பரவியுள்ளது.

தீ பரவியதை அடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த வீட்டிலிருந்த தளபாடங்கள், ஆடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் தீயினால் சேதமாகியுள்ளன.

வீட்டிலிருந்தோருக்கு எவ்வித பாதிப்புகளை ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தோப்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


சமையல் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து திருமலையில் சம்பவம் திருகோணமலை, தோப்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்றிரவு (05) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.வீட்டு உரிமையாளர் சமையல் எரிவாயுவினை பொருத்திக் கொண்டிருந்த போது சமையல் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ பரவியுள்ளது.தீ பரவியதை அடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.இதன் காரணமாக குறித்த வீட்டிலிருந்த தளபாடங்கள், ஆடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் தீயினால் சேதமாகியுள்ளன.வீட்டிலிருந்தோருக்கு எவ்வித பாதிப்புகளை ஏற்படவில்லை.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தோப்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement