நடிகர் தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி, செல்வ ராகவன் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ராயன். இந்த படத்தை தனுஷ் இயக்கியுள்ளார்.
இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்ட போதிலும் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இந்த நிலையில், இன்றைய தினம் ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஏ. ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார்.
ராயன் படம் வடசென்னை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம்.
மேலும் படத்தின் ரீ-ரெகார்டிங் பணிகள் தாமதமாகி வருவதால் படத்தின் ரிலீஸுக்கும் இது காரணமாக கூறப்பட்டது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் இந்த பட ப்ரமோஷன்களை தற்போது படக்குழு ஆரம்பித்துள்ளது.
தற்போது வெளியான போஸ்டரின் படி பின்னணியில் ராவணனின் உருவமும் முன்னிலையில் அமர்ந்திருக்கும் தனுஷ் எரிக்கப்படுவதாகவும், அதை அனைவரும் கொண்டாடுவது போலவும் போஸ்டரில் காட்டப்படுகிறது. இந்த போஸ்டரில் தனுஷ் தீவிரமான பார்வையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனுஷ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர். எந்த படத்துக்கு தெரியுமா நடிகர் தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி, செல்வ ராகவன் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ராயன். இந்த படத்தை தனுஷ் இயக்கியுள்ளார்.இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்ட போதிலும் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.இந்த நிலையில், இன்றைய தினம் ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஏ. ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார்.ராயன் படம் வடசென்னை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம்.மேலும் படத்தின் ரீ-ரெகார்டிங் பணிகள் தாமதமாகி வருவதால் படத்தின் ரிலீஸுக்கும் இது காரணமாக கூறப்பட்டது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் இந்த பட ப்ரமோஷன்களை தற்போது படக்குழு ஆரம்பித்துள்ளது.தற்போது வெளியான போஸ்டரின் படி பின்னணியில் ராவணனின் உருவமும் முன்னிலையில் அமர்ந்திருக்கும் தனுஷ் எரிக்கப்படுவதாகவும், அதை அனைவரும் கொண்டாடுவது போலவும் போஸ்டரில் காட்டப்படுகிறது. இந்த போஸ்டரில் தனுஷ் தீவிரமான பார்வையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.