• Nov 22 2024

சாவல்கட்டு இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்...!samugammedia

Sharmi / Feb 6th 2024, 3:04 pm
image

சாவல்கட்டு இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி சாவல்கட்டு  கடற்றொழிலாளர்களால் யாழில் இன்று(06)  காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை யாழ் மாவட்ட செயலத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாவல்கட்டு மீனவர்கள், மாவட்ட செயலாளரை சந்தித்து தமது தமது பிரச்சனைகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு சென்று  ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து நுழைவாயில் முன்பாக அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தாங்கள் ஆளுநரை சந்தித்த பின்னரே போராட்டத்தை நிறுத்துவோம் என தெரிவித்த சாவல்கட்டு மீனவர்கள் நண்பகல் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்  போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் ' அளுநர் தற்போது யாழ்ப்பாணம் இல்லாத காரணத்தினால் இன்று சந்திக்க முடியாது எனவும் எதிர்வரும் 8ஆம் திகதி ஆளுநரை சந்திக்கமுடியும்' என கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


சாவல்கட்டு இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்.samugammedia சாவல்கட்டு இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி சாவல்கட்டு  கடற்றொழிலாளர்களால் யாழில் இன்று(06)  காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை யாழ் மாவட்ட செயலத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாவல்கட்டு மீனவர்கள், மாவட்ட செயலாளரை சந்தித்து தமது தமது பிரச்சனைகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.அதனைத் தொடர்ந்து, பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு சென்று  ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து நுழைவாயில் முன்பாக அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.தாங்கள் ஆளுநரை சந்தித்த பின்னரே போராட்டத்தை நிறுத்துவோம் என தெரிவித்த சாவல்கட்டு மீனவர்கள் நண்பகல் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில்  போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் ' அளுநர் தற்போது யாழ்ப்பாணம் இல்லாத காரணத்தினால் இன்று சந்திக்க முடியாது எனவும் எதிர்வரும் 8ஆம் திகதி ஆளுநரை சந்திக்கமுடியும்' என கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement