பெலியத்தையில் ஐந்து பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயணித்த ஜீப் வண்டி, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் இருந்து கண்டி பிரதேசத்தில் 24 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த நபர் ஏற்கனவே நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கொலையுடன் தொடர்புடைய இரு துப்பாக்கிதாரிகளில் ஒருவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த 22ஆம் திகதி பெலியத்தை பகுதியில் வைத்து அப்பே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது தொடர்பில் பல தரப்பினரிடம் விசாரணைகளை மேற்கொண்டதில், தாக்குதலுக்கு வந்த இரண்டு துப்பாக்கிதாரிகளில் ஒருவர் கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற சம்பிக்க பிரசன்ன குமார என்ற சிப்பாய் என தெரிவயவந்துள்ளது.
கொலையின் பின்னர் கம்புருபிட்டிய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெஜேரோவில் இருந்து இறங்கியவர் இவர் என விசாரணை அதிகாரிகள் பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.
கொலையின் பின்னர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ள அவர், கடந்த 29ஆம் திகதி காலை 8.11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து அபுதாபி நோக்கிப் புறப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் தனது உண்மையான விபரங்கள் அடங்கிய வெளிநாட்டு பயண அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கெமராக்களிலும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளிகள் பயணித்த பெஜேரோ, 24 லட்சம் ரூபாய்க்கு கொள்ளை வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பதில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் இருந்து கண்டி பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவில் சில காலம் பணியாற்றிய அவர், பின்னர் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
மகேஷ் சில்வா என்ற குறித்த நபர் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள நிதி நிறுவனமொன்றிலும் பணியாற்றியவர் என்பதுடன் அவர் ஊரகஹ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
தற்போது தலைமறைவாகியுள்ள அவர் கடல் மார்க்கமாக வெளி நாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பெஜேரோவை இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் மேஜர் ஒருவரே கொலை செய்யப்பட்ட தினத்தில் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த நபரையும் தற்போது காணவில்லை. எவ்வாறாயினும், கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரிகள் இருவரில் ஒருவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பெலியத்தையில் ஐந்து பேர் மீது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- வெளியான அதிர்ச்சி தகவல்.samugammedia பெலியத்தையில் ஐந்து பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயணித்த ஜீப் வண்டி, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் இருந்து கண்டி பிரதேசத்தில் 24 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும் குறித்த நபர் ஏற்கனவே நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இதற்கிடையில், கொலையுடன் தொடர்புடைய இரு துப்பாக்கிதாரிகளில் ஒருவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.கடந்த 22ஆம் திகதி பெலியத்தை பகுதியில் வைத்து அப்பே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இது தொடர்பில் பல தரப்பினரிடம் விசாரணைகளை மேற்கொண்டதில், தாக்குதலுக்கு வந்த இரண்டு துப்பாக்கிதாரிகளில் ஒருவர் கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற சம்பிக்க பிரசன்ன குமார என்ற சிப்பாய் என தெரிவயவந்துள்ளது.கொலையின் பின்னர் கம்புருபிட்டிய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெஜேரோவில் இருந்து இறங்கியவர் இவர் என விசாரணை அதிகாரிகள் பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.கொலையின் பின்னர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ள அவர், கடந்த 29ஆம் திகதி காலை 8.11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து அபுதாபி நோக்கிப் புறப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அவர் தனது உண்மையான விபரங்கள் அடங்கிய வெளிநாட்டு பயண அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கெமராக்களிலும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலையாளிகள் பயணித்த பெஜேரோ, 24 லட்சம் ரூபாய்க்கு கொள்ளை வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பதில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் இருந்து கண்டி பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.குற்றப் புலனாய்வுப் பிரிவில் சில காலம் பணியாற்றிய அவர், பின்னர் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.மகேஷ் சில்வா என்ற குறித்த நபர் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள நிதி நிறுவனமொன்றிலும் பணியாற்றியவர் என்பதுடன் அவர் ஊரகஹ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.தற்போது தலைமறைவாகியுள்ள அவர் கடல் மார்க்கமாக வெளி நாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.குறித்த பெஜேரோவை இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் மேஜர் ஒருவரே கொலை செய்யப்பட்ட தினத்தில் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அந்த நபரையும் தற்போது காணவில்லை. எவ்வாறாயினும், கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரிகள் இருவரில் ஒருவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.