• May 18 2024

சிவராத்திரியையொட்டி வரலாற்றில் முதல்முறையாக ஒரு தாமரைப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை! SamugamMedia

Chithra / Feb 18th 2023, 6:28 pm
image

Advertisement

தமிழ் நாடு மதுரை மாட்டுத்தாவணியில் மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் பெற்ற மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி சிவன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

சிறப்பு பூஜையில் சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இதற்காக பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணியில் மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இன்று சிவராத்திரியொட்டி பூக்களின் வரத்தும் அதிகமாக இருந்தது.


மல்லிகை பூ 1500 முதல் 2000 ரூபாய் வரை விற்கப்பட்டது. பிச்சி ரூ. 1,500, முல்லை ரூ. 1500, செவ்வந்தி ரூ. 200, சம்பங்கி ரூ. 300, செண்டுமல்லி ரூ. 150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மலர் சந்தையில் தாமரை பூக்கள் வழக்கமாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுவது வழக்கம். 

ஆனால் இன்று மதுரை பூ மார்க்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தாமரைப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தாமரைப்பூவின் இந்த திடீர் விலை உயர்வு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சிவராத்திரியையொட்டி வரலாற்றில் முதல்முறையாக ஒரு தாமரைப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை SamugamMedia தமிழ் நாடு மதுரை மாட்டுத்தாவணியில் மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் பெற்ற மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.சிறப்பு பூஜையில் சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இதற்காக பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.மதுரை மாட்டுத்தாவணியில் மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இன்று சிவராத்திரியொட்டி பூக்களின் வரத்தும் அதிகமாக இருந்தது.மல்லிகை பூ 1500 முதல் 2000 ரூபாய் வரை விற்கப்பட்டது. பிச்சி ரூ. 1,500, முல்லை ரூ. 1500, செவ்வந்தி ரூ. 200, சம்பங்கி ரூ. 300, செண்டுமல்லி ரூ. 150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.மலர் சந்தையில் தாமரை பூக்கள் வழக்கமாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று மதுரை பூ மார்க்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தாமரைப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இதனையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தாமரைப்பூவின் இந்த திடீர் விலை உயர்வு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement