• May 05 2024

யாழ்.மாநகர சபையின் ஆவணங்களை முன்னாள் முதல்வர் அள்ளிச் சென்றாரா? SamugamMedia

Chithra / Feb 18th 2023, 6:47 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அரச ஆவணங்களை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் அள்ளிச் சென்றுவிட்டார் என ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ப.தர்சானந் குற்றம் சாட்டுகின்றார். 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பெப்ரவரி மாதாந்த அமர்வு 16ஆம் திகதி சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார். 

சபையின் நிதியில், சபையின் செயல்பாட்டிற்காக பிற நிறுவனங்கள், மாநகர சபை, உறுப்பினர்கள் மற்றும் தனியாருடனான இரு வழித் தொடர்புகளிற்காக பல வகையான கோவைகள் ஆவணங்கள் பேணப்படுவது வரமை அதேபோன்று பேணப்பட்டது. நாமும் பல விடயங்களை சபையெனக் கருதியே வழங்கினோம். 

ஆனால் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தான் பதவி விலகிய சமயம் அலுவலகத்தில் இருந்த அத்தனை ஆவணங்களையும் அள்ளிச் சென்று விட்டார் என்பதனை முதல்வர் அலுவலகத்தை பார்வையிடும்போது நானே கண்ணுற்றேன். இந்த அலுவலக ஆவணங்கள் என்பது அரச சொத்து அவற்றை எடுத்துச் சென்றமை மிகப் பெரும் தவறு என்றார். 

இதன்போது கருத்து தெரிவித்த ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் மற்றுமோர் உறுப்பினரான நித்தியானந்தன்,

தற்போதைய முதல்வர் பொறுப்பேற்றவுடன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டேன். அங்கே அலுவலகம் வெறுமையாகவே காணப்படுகின்றது. அலுமாரி முதல் மேசை வரை குண்டூசிகூடக் கிடையாது இது தவறான நடவடிக்கை என்றார். 

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வை.கிருபாகரன் கருத்து தெரிவிக்கையில், 

மாநகர முதல்வர் செயலக அலுவல்கள் எவர் இருந்தாலும் தொடர வேண்டும். முதல்வர் மாறினால் ஆவணங்கள் மாறுமா என்பதனை முன்னாள் முதல்வர் என்ற அனுபவத்தின் ஊடாக நீங்கள் பதிலளிக்க வேண்டும் எனக் கோரியபோது 2018முதல் 2020டிசம்பர் வரையில் நான் முதல்வராக இருந்து வெளியேறும்போது அனைத்து ஆவணங்களையும் செயலாளர் பகுதியில் ஒப்படைத்தே வெளியேறினேன் அதனை யாரும் செயலாளர் பகுதியில் உறுதி செய்யலாம் ஆனால் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இரண்டே இரண்டு கோவைகள்தான் எனக்கு காட்டப்பட்டன எஞ்சியவை தொடர்பில் எனக்குத் தெரியாது எனப் பதிலளித்தபோது அவ்வாறு அரச ஆவணங்கள் அல்லது திணைக்கள நம்பிக்கையில் வழங்கிய ஆவணங்களை அவ்வாறு தனிப்பட்ட முறையில் எடுத்துச் சென்றமைக்கு முதல்வராகிய நீங்கள் பதிலளிக்க வேண்டும் அதற்கு என்ன நடவடிக்கை என உறுப்பினர் வை.கிருபாகரன் தெரிவித்தார். 

இதன்போது ஆவணங்களிற்கு ஆணையாளரே பொறுப்பு என்ற வகையில் ஆணையாளரும் பதிலளிக்க வேண்டும் என உறுப்பினர் ப.தர்சானந் கோரக்கை விடுத்தபோது அவ்வாறு எந்த ஆவணங்களும் என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை செயலாளர் பகுதி என்பதனால் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதா என ஆணையாளர் த.ஜெயசீலன் கோரினார். 

இதன்போது பதிலளித்த மாநகர சபையின் செயலாளர் தயாளன் நான் இந்தச் சபைக்கு முன்னாள் முதல்வர் சென்றதன் பின்பே பணிக்கு அமர்த்தப்பட்டேன் எனப் பதிலளித்தார். 

இவற்றிற்கு பதிலளித்து  மாநகர முதல்வர் இ.ஆனல்ட் உரையாற்றும்போது,

அதனை ஆராய்ந்து அதற்கு நடவடிக்கைக்கு சென்று அது தொடர்பில் அலையவே நேரம் சரியாகிவிடும் என்பதோடு இதில் யார் தவறு யார் சரி எனப் பார்க்கும் காலம் இல்லை இருக்கும் காலத்தில் முடிந்தவற்றை மேற்கொள்வோம் எனத் தெரிவித்தார். 

இருந்தபோதும்  உறுப்பினர் வை.கிருபாகரன் இது ஏற்க முடியாத பதில். ஏனெனில் ஒரு தவறு நடந்தால் தவறு, அதனை புரிந்தவர் யார் என்பதனை கூற வேண்டும் மாறாக ஒரு தவறு நடந்தால் அதனை மேற்கொண்டவர் மட்டும் குற்றவாளி அல்ல அதனை மறைத்தவரும் குற்றவாளிதான் எனத் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் ஆவணங்களை முன்னாள் முதல்வர் அள்ளிச் சென்றாரா SamugamMedia யாழ்ப்பாணம் மாநகர சபையின் அரச ஆவணங்களை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் அள்ளிச் சென்றுவிட்டார் என ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ப.தர்சானந் குற்றம் சாட்டுகின்றார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் பெப்ரவரி மாதாந்த அமர்வு 16ஆம் திகதி சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார். சபையின் நிதியில், சபையின் செயல்பாட்டிற்காக பிற நிறுவனங்கள், மாநகர சபை, உறுப்பினர்கள் மற்றும் தனியாருடனான இரு வழித் தொடர்புகளிற்காக பல வகையான கோவைகள் ஆவணங்கள் பேணப்படுவது வரமை அதேபோன்று பேணப்பட்டது. நாமும் பல விடயங்களை சபையெனக் கருதியே வழங்கினோம். ஆனால் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தான் பதவி விலகிய சமயம் அலுவலகத்தில் இருந்த அத்தனை ஆவணங்களையும் அள்ளிச் சென்று விட்டார் என்பதனை முதல்வர் அலுவலகத்தை பார்வையிடும்போது நானே கண்ணுற்றேன். இந்த அலுவலக ஆவணங்கள் என்பது அரச சொத்து அவற்றை எடுத்துச் சென்றமை மிகப் பெரும் தவறு என்றார். இதன்போது கருத்து தெரிவித்த ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் மற்றுமோர் உறுப்பினரான நித்தியானந்தன்,தற்போதைய முதல்வர் பொறுப்பேற்றவுடன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டேன். அங்கே அலுவலகம் வெறுமையாகவே காணப்படுகின்றது. அலுமாரி முதல் மேசை வரை குண்டூசிகூடக் கிடையாது இது தவறான நடவடிக்கை என்றார். இதன்போது கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வை.கிருபாகரன் கருத்து தெரிவிக்கையில், மாநகர முதல்வர் செயலக அலுவல்கள் எவர் இருந்தாலும் தொடர வேண்டும். முதல்வர் மாறினால் ஆவணங்கள் மாறுமா என்பதனை முன்னாள் முதல்வர் என்ற அனுபவத்தின் ஊடாக நீங்கள் பதிலளிக்க வேண்டும் எனக் கோரியபோது 2018முதல் 2020டிசம்பர் வரையில் நான் முதல்வராக இருந்து வெளியேறும்போது அனைத்து ஆவணங்களையும் செயலாளர் பகுதியில் ஒப்படைத்தே வெளியேறினேன் அதனை யாரும் செயலாளர் பகுதியில் உறுதி செய்யலாம் ஆனால் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இரண்டே இரண்டு கோவைகள்தான் எனக்கு காட்டப்பட்டன எஞ்சியவை தொடர்பில் எனக்குத் தெரியாது எனப் பதிலளித்தபோது அவ்வாறு அரச ஆவணங்கள் அல்லது திணைக்கள நம்பிக்கையில் வழங்கிய ஆவணங்களை அவ்வாறு தனிப்பட்ட முறையில் எடுத்துச் சென்றமைக்கு முதல்வராகிய நீங்கள் பதிலளிக்க வேண்டும் அதற்கு என்ன நடவடிக்கை என உறுப்பினர் வை.கிருபாகரன் தெரிவித்தார். இதன்போது ஆவணங்களிற்கு ஆணையாளரே பொறுப்பு என்ற வகையில் ஆணையாளரும் பதிலளிக்க வேண்டும் என உறுப்பினர் ப.தர்சானந் கோரக்கை விடுத்தபோது அவ்வாறு எந்த ஆவணங்களும் என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை செயலாளர் பகுதி என்பதனால் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதா என ஆணையாளர் த.ஜெயசீலன் கோரினார். இதன்போது பதிலளித்த மாநகர சபையின் செயலாளர் தயாளன் நான் இந்தச் சபைக்கு முன்னாள் முதல்வர் சென்றதன் பின்பே பணிக்கு அமர்த்தப்பட்டேன் எனப் பதிலளித்தார். இவற்றிற்கு பதிலளித்து  மாநகர முதல்வர் இ.ஆனல்ட் உரையாற்றும்போது,அதனை ஆராய்ந்து அதற்கு நடவடிக்கைக்கு சென்று அது தொடர்பில் அலையவே நேரம் சரியாகிவிடும் என்பதோடு இதில் யார் தவறு யார் சரி எனப் பார்க்கும் காலம் இல்லை இருக்கும் காலத்தில் முடிந்தவற்றை மேற்கொள்வோம் எனத் தெரிவித்தார். இருந்தபோதும்  உறுப்பினர் வை.கிருபாகரன் இது ஏற்க முடியாத பதில். ஏனெனில் ஒரு தவறு நடந்தால் தவறு, அதனை புரிந்தவர் யார் என்பதனை கூற வேண்டும் மாறாக ஒரு தவறு நடந்தால் அதனை மேற்கொண்டவர் மட்டும் குற்றவாளி அல்ல அதனை மறைத்தவரும் குற்றவாளிதான் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement