• May 18 2024

வெளிநாட்டு படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி...! கிராமிய சம்மேளன அறிக்கை உண்மைக்கு புறம்பானது...!samugammedia

Sharmi / Nov 4th 2023, 6:04 pm
image

Advertisement

மாவட்ட கிராமிய சம்மேளனத்துக்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் ஊடாக ஒரு அறிக்கை விடப்பட்டது. அந்த குழுவின் தலைவர் நற்குணம் அவர்கள் 1979ஆம் ஆண்டு சட்டத்தில் இருக்கின்றபடி வெளிநாட்டு படகுகளை நாட்டுக்குள் விடலாம். அதனால் அந்நிய செலாவணி கூடும் என தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தை சரிவர படிக்காமல் யாரோ சொல்வதை கேட்டு, அல்லது யாரோ எழுதி கொடுத்ததை அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய இணைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்று (03) மாலை அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சட்டம் 1979இல் கடற்தொழில் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் ஒழுங்கு விதிச்சட்டம் இலக்கம் 59 என அழைக்கப்படலாம். இந்த சட்டத்திலே தான் இவர் கூறிய வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் அனுமதி தொடர்பாக கூறப்பட்டதாக கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் நான்காவது விதியில் சொல்லப்படுகின்றது வெளிநாட்டு படகுகள் மீன்பிடிக்க மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறாவதிலே சொல்லப்படுகின்றது, நிறுத்தி நிற்பதற்கான அதாவது நங்கூரமிடப்படுவதற்கான அனுமதி, இலங்கை கடற்பரப்பினுள் வெளிநாட்டு படகுகள் நுழைவது தடை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வெளிநாட்டுப் படகுகள் அனுமதிக்கப்படுகின்றது என்ற தொனியில் போடப்பட்டிருக்கின்றது.

நாங்கள் இதில் நான்காவது விதியை பார்க்கும் பொழுது, பிரிவு ஆறின் கீழ் வழங்கப்பட்ட அனுமதி அதிகாரத்தை தவிர, பிரிவு 12இன் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு இலங்கை கடற்பரப்பில் எந்த வெளிநாட்டு படகுகளும் மீன் பிடிப்பதற்கு அல்லது அது தொடர்பான செயல்பாடுகளுக்கும் உபயோகிக்கப்பட மாட்டாது என்று அங்கே சொல்லப்படுகின்றது.

இதனை நாங்கள் உற்று நோக்கும் போது பன்னிரண்டாவதில் சொல்லப்படுகின்றதின்படி எதற்காக வெளிநாட்டு படகுகள் அனுமதிக்கப்படுகின்றது என்றால், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி வளங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் பரிசோதித்து மீன்பிடித்தல் அல்லது விஞ்ஞான ஆராய்ச்சி தொழில்நுட்பத்திற்காக எந்த வெளிநாட்டு மீன்பிடி படகுகளும் பிரயோகிப்பதற்கு பணிப்பாளர் அதிகாரம் வழங்கலாம் என்ற வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளங்களை ஆய்வு செய்வதற்கும், மீன் பரிசோதிப்பதற்கும், விஞ்ஞான ஆராய்ச்சி தொழில்நுட்பதற்காகவும் தான் அனுமதி வளங்குவதாக 1979 ஆம் ஆண்டு சட்டம் சொல்லப்படுகின்றது. அதைத்தவிர வேறு எந்த தொழிலுக்காகவும் வெளிநாட்டு படகுகள் அனுமதிக்கப்படவில்லை. 1979 ஆம் ஆண்டு சட்டத்தில் அது சொல்லப்படவும் இல்லை.

இதனைத் தவறாக புரிந்து கொண்டு வெளிநாட்டு படகுகள் மீன் பிடிக்கலாம் என்ற கருத்தினை நற்குணம் அவர்கள் சொல்லியிருப்பது மிகவும் தவறானது. இதற்கு ஆதாரம் இல்லாமல் நாங்கள் இந்த விடயத்தை சொல்லவில்லை இங்கு அதற்கு பலமாக, அல்லது அதற்கு திருத்தமாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு உயர் நீதிமன்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது வர்த்தமானியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கே என்ன சொல்லப்படுகின்றது என்றால். வெளிநாட்டு மீன்பிடி படகுகள் ஒழுங்குப் பிரமாணம் என்ற சட்டத்திலே வெளிநாட்டு படகுகள் வரக் கூடாது என்ற நிபந்தனை அங்கே சொல்லப்படுகின்றது. அதை தாண்டி வருகின்ற படகுகளை கைது செய்யலாம், நீதிமன்றத்தில் ஆயர் படுத்தி அவர்களை குற்றவாளியாக கண்டு அந்த படகுகளை பறிமுதல் செய்யப்படலாம், 60 இலட்சம் ரூபாய்க்கு மேலே அவர்களுக்கு தண்டப்படும் விதிக்கலாம் என்று கூறப்படுகின்றது.

முற்று முழுதாக 79 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு சட்டம் அங்கே நிற்கின்றது. எனவே எங்கள் நாட்டு கடற்பரப்புக்குள்ளே வெளிநாட்டு படகுகள் மீன்பிடிப்பதற்கு எந்த வித அனுமதியும் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக தற்போது கொண்டு வருகின்ற சட்டத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டு மீனவர்களுக்கு அனுமதி கொடுக்கும் போது அங்கேயும் ஒரு சட்டம் தெளிவாகிறது. இலங்கை வரலாற்று கடற்பரப்பு, பிரதேச கடற்பரப்பு மற்றும் பிரத்தியேகமான பொருளாதார வலயத்தில் இந்திய மீன்பிடி படகுகள் வந்து மீன் பிடிக்க மாட்டார்கள். என 1976 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை கூறுகின்றது. இலங்கையின் சுதந்திரம், இறைமை, ஒற்றுமை மற்றும் பிரதேச ஒருமைப்பாடு என்பவற்றினை அரசாங்கம் பாதுகாக்கும் என இலங்கை அரசியலமைப்பு உறுப்புரை 27 உபயோதிகளுடன் கூறுகின்றது.

எனவே வெளிநாட்டு படகுகள் ஒட்டுமொத்தமாக வரக்கூடாது என்ற ஒரு சட்டத்தையும் இங்கே நாங்கள் ஒழுங்கு பிரமாணத்தில் கொண்டு வந்ததற்கு அப்பாலே, இந்திய படகுகள் வராது என்று இந்தியாவாலே கூறப்பட்டது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்தபோது 76ஆம் ஆண்டு மற்றும் 74ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையிலே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் தான் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை அடையாளப்படுத்தப்பட்டது. அந்த எல்லையை தாண்டி வரக்கூடாது என்பதற்காக தான் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே எல்லைக்கோடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது - என்றார்.

வெளிநாட்டு படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி. கிராமிய சம்மேளன அறிக்கை உண்மைக்கு புறம்பானது.samugammedia மாவட்ட கிராமிய சம்மேளனத்துக்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் ஊடாக ஒரு அறிக்கை விடப்பட்டது. அந்த குழுவின் தலைவர் நற்குணம் அவர்கள் 1979ஆம் ஆண்டு சட்டத்தில் இருக்கின்றபடி வெளிநாட்டு படகுகளை நாட்டுக்குள் விடலாம். அதனால் அந்நிய செலாவணி கூடும் என தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தை சரிவர படிக்காமல் யாரோ சொல்வதை கேட்டு, அல்லது யாரோ எழுதி கொடுத்ததை அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய இணைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.நேற்று (03) மாலை அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த சட்டம் 1979இல் கடற்தொழில் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் ஒழுங்கு விதிச்சட்டம் இலக்கம் 59 என அழைக்கப்படலாம். இந்த சட்டத்திலே தான் இவர் கூறிய வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் அனுமதி தொடர்பாக கூறப்பட்டதாக கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் நான்காவது விதியில் சொல்லப்படுகின்றது வெளிநாட்டு படகுகள் மீன்பிடிக்க மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆறாவதிலே சொல்லப்படுகின்றது, நிறுத்தி நிற்பதற்கான அதாவது நங்கூரமிடப்படுவதற்கான அனுமதி, இலங்கை கடற்பரப்பினுள் வெளிநாட்டு படகுகள் நுழைவது தடை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வெளிநாட்டுப் படகுகள் அனுமதிக்கப்படுகின்றது என்ற தொனியில் போடப்பட்டிருக்கின்றது.நாங்கள் இதில் நான்காவது விதியை பார்க்கும் பொழுது, பிரிவு ஆறின் கீழ் வழங்கப்பட்ட அனுமதி அதிகாரத்தை தவிர, பிரிவு 12இன் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு இலங்கை கடற்பரப்பில் எந்த வெளிநாட்டு படகுகளும் மீன் பிடிப்பதற்கு அல்லது அது தொடர்பான செயல்பாடுகளுக்கும் உபயோகிக்கப்பட மாட்டாது என்று அங்கே சொல்லப்படுகின்றது.இதனை நாங்கள் உற்று நோக்கும் போது பன்னிரண்டாவதில் சொல்லப்படுகின்றதின்படி எதற்காக வெளிநாட்டு படகுகள் அனுமதிக்கப்படுகின்றது என்றால், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி வளங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் பரிசோதித்து மீன்பிடித்தல் அல்லது விஞ்ஞான ஆராய்ச்சி தொழில்நுட்பத்திற்காக எந்த வெளிநாட்டு மீன்பிடி படகுகளும் பிரயோகிப்பதற்கு பணிப்பாளர் அதிகாரம் வழங்கலாம் என்ற வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வளங்களை ஆய்வு செய்வதற்கும், மீன் பரிசோதிப்பதற்கும், விஞ்ஞான ஆராய்ச்சி தொழில்நுட்பதற்காகவும் தான் அனுமதி வளங்குவதாக 1979 ஆம் ஆண்டு சட்டம் சொல்லப்படுகின்றது. அதைத்தவிர வேறு எந்த தொழிலுக்காகவும் வெளிநாட்டு படகுகள் அனுமதிக்கப்படவில்லை. 1979 ஆம் ஆண்டு சட்டத்தில் அது சொல்லப்படவும் இல்லை.இதனைத் தவறாக புரிந்து கொண்டு வெளிநாட்டு படகுகள் மீன் பிடிக்கலாம் என்ற கருத்தினை நற்குணம் அவர்கள் சொல்லியிருப்பது மிகவும் தவறானது. இதற்கு ஆதாரம் இல்லாமல் நாங்கள் இந்த விடயத்தை சொல்லவில்லை இங்கு அதற்கு பலமாக, அல்லது அதற்கு திருத்தமாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு உயர் நீதிமன்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது வர்த்தமானியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கே என்ன சொல்லப்படுகின்றது என்றால். வெளிநாட்டு மீன்பிடி படகுகள் ஒழுங்குப் பிரமாணம் என்ற சட்டத்திலே வெளிநாட்டு படகுகள் வரக் கூடாது என்ற நிபந்தனை அங்கே சொல்லப்படுகின்றது. அதை தாண்டி வருகின்ற படகுகளை கைது செய்யலாம், நீதிமன்றத்தில் ஆயர் படுத்தி அவர்களை குற்றவாளியாக கண்டு அந்த படகுகளை பறிமுதல் செய்யப்படலாம், 60 இலட்சம் ரூபாய்க்கு மேலே அவர்களுக்கு தண்டப்படும் விதிக்கலாம் என்று கூறப்படுகின்றது.முற்று முழுதாக 79 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு சட்டம் அங்கே நிற்கின்றது. எனவே எங்கள் நாட்டு கடற்பரப்புக்குள்ளே வெளிநாட்டு படகுகள் மீன்பிடிப்பதற்கு எந்த வித அனுமதியும் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.அடுத்ததாக தற்போது கொண்டு வருகின்ற சட்டத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டு மீனவர்களுக்கு அனுமதி கொடுக்கும் போது அங்கேயும் ஒரு சட்டம் தெளிவாகிறது. இலங்கை வரலாற்று கடற்பரப்பு, பிரதேச கடற்பரப்பு மற்றும் பிரத்தியேகமான பொருளாதார வலயத்தில் இந்திய மீன்பிடி படகுகள் வந்து மீன் பிடிக்க மாட்டார்கள். என 1976 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை கூறுகின்றது. இலங்கையின் சுதந்திரம், இறைமை, ஒற்றுமை மற்றும் பிரதேச ஒருமைப்பாடு என்பவற்றினை அரசாங்கம் பாதுகாக்கும் என இலங்கை அரசியலமைப்பு உறுப்புரை 27 உபயோதிகளுடன் கூறுகின்றது.எனவே வெளிநாட்டு படகுகள் ஒட்டுமொத்தமாக வரக்கூடாது என்ற ஒரு சட்டத்தையும் இங்கே நாங்கள் ஒழுங்கு பிரமாணத்தில் கொண்டு வந்ததற்கு அப்பாலே, இந்திய படகுகள் வராது என்று இந்தியாவாலே கூறப்பட்டது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்தபோது 76ஆம் ஆண்டு மற்றும் 74ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையிலே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் தான் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை அடையாளப்படுத்தப்பட்டது. அந்த எல்லையை தாண்டி வரக்கூடாது என்பதற்காக தான் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே எல்லைக்கோடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement