நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகி உள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியனேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தெரிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரை நிறுத்தவேண்டும் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை உருவாக்க காலத்திலிருந்தே தீர்மானித்திருந்தது.
இதனடிப்படையில் பலரது பெயர்கள் தமிழ் பொது வேட்பாளருக்காக முன்மொழியப்பட்டிருந்தனர்.
அவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் எம்.பி. அரியநேந்திரன் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகி உள்ளன.மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியனேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தெரிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரை நிறுத்தவேண்டும் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை உருவாக்க காலத்திலிருந்தே தீர்மானித்திருந்தது.இதனடிப்படையில் பலரது பெயர்கள் தமிழ் பொது வேட்பாளருக்காக முன்மொழியப்பட்டிருந்தனர். அவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன