• Jan 09 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பேரில் நடக்கும் மோசடி! மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Jan 2nd 2025, 11:16 am
image

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பயணப்பொதிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

பயண பொதிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் செயற்பாடு விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமற்ற சமூக ஊடக பக்கங்கள் மற்றும் இணையத்தளங்களில் உரிமை கோரப்படாத பொதிகள் விற்பனைக்கு வழங்கும் பதிவுகளை வெளியிடுவது குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இதுபோன்ற விளம்பரங்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பேரில் நடக்கும் மோசடி மக்களுக்கு அவசர எச்சரிக்கை  கட்டுநாயக்க விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பயணப்பொதிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.பயண பொதிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் செயற்பாடு விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.உத்தியோகபூர்வமற்ற சமூக ஊடக பக்கங்கள் மற்றும் இணையத்தளங்களில் உரிமை கோரப்படாத பொதிகள் விற்பனைக்கு வழங்கும் பதிவுகளை வெளியிடுவது குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இதுபோன்ற விளம்பரங்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement