• Nov 24 2024

பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் சுதந்திரக் கட்சி..!

Chithra / Oct 10th 2024, 10:28 am
image


பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘சிலிண்டர்’ சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

இருந்தபோதிலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி கதிரைச் சின்னத்திலேயே போட்டியிடுமென்று அந்தக் கட்சியின் பொருளாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் இன்று (10) கையொப்பமிடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ப்ளவர் வீதியில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி கூட்டணியாக இம்முறை தேர்தலில் போட்டியிடுவோம். 

பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்திலேயே போட்டியிடுவோம். 

ஆனால் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கதிரைச் சின்னத்திலேயே போட்டியிடுகிறோம். 

அதேபோன்று, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் கதிரைச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.


பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் சுதந்திரக் கட்சி. பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘சிலிண்டர்’ சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.இருந்தபோதிலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி கதிரைச் சின்னத்திலேயே போட்டியிடுமென்று அந்தக் கட்சியின் பொருளாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.மேலும், பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் இன்று (10) கையொப்பமிடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ப்ளவர் வீதியில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி கூட்டணியாக இம்முறை தேர்தலில் போட்டியிடுவோம். பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்திலேயே போட்டியிடுவோம். ஆனால் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கதிரைச் சின்னத்திலேயே போட்டியிடுகிறோம். அதேபோன்று, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் கதிரைச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement