சுகாதார ஊழியர்களிற்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்!

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகத்தின் ஊடாக எரிபொருளைப் பெறுவதற்கு ஊழியர்கள் பதிவு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முன்னுரிமை அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்கும்.

நாடு முழுவதும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட 74 எரிபொருள் நிலையங்கள் மூலம் எரிபொருள் வழங்கப்படும்.

அத்துடன், எரிபொருள் விநியோகத்தில் சுகாதார ஊழியர்களுக்கு இன்று முதல் புதிய நடைமுறை முல்லைத்தீவிலும் ஏற்பாடு

இதற்கமைய முல்லைத்தீவிலும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு சுகாதார ஊழியர்களுக்கான பதிவுகளை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு அவர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உ.உமாசங்கர் தெரிவித்தார்

இதேவேளை, இன்று சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு அளிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஏனைய பொதுமக்கள் இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாமெனவும் கோரப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை