கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் மசகு எண்ணெய் இறக்கும் குழாய் இணைப்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இன்று (14) அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதனால் மசகு எண்ணெய் கடல் நீரில் கலந்துள்ளதாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு கொழும்பு துறைமுகத்திலிருந்து மசகு எண்ணெயை இறக்கும்போதே இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளது.
அதனை சீரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் நீரில் கலந்த எண்ணெயை அகற்றும் பணியில் கடலோர காவல் படை, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கடற்படை ஆகியன ஈடுபட்டுள்ளன.
எண்ணெய் கசிவு பரவியுள்ள பகுதியைக் கண்டறிய விமானப் படையின் உதவியைப் பெறவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகம் அருகே மசகு எண்ணெய் கசிவு கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் மசகு எண்ணெய் இறக்கும் குழாய் இணைப்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.இன்று (14) அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதனால் மசகு எண்ணெய் கடல் நீரில் கலந்துள்ளதாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு கொழும்பு துறைமுகத்திலிருந்து மசகு எண்ணெயை இறக்கும்போதே இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடல் நீரில் கலந்த எண்ணெயை அகற்றும் பணியில் கடலோர காவல் படை, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கடற்படை ஆகியன ஈடுபட்டுள்ளன.எண்ணெய் கசிவு பரவியுள்ள பகுதியைக் கண்டறிய விமானப் படையின் உதவியைப் பெறவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.