• Mar 10 2025

கல்வி கற்கச் சென்ற யுவதி விபத்தில் பலி; தந்தை படுகாயம்

Chithra / Mar 9th 2025, 1:09 pm
image

அனுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

அனுராதபுரம், பந்துலகமவில் உள்ள அரச உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் படித்து வந்த எப்பாவல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சந்தரேகா சுபோதனி ஹேமந்தா என்ற யுவதியே உயிரிழந்தார்.

கல்னேவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கியில் சென்ற மகள் உயிரிழந்ததாகவும், தந்தை படுகாயமடைந்ததாகவும் அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையுடன் ஒரு பாடநெறியில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் 35 வயதுடைய பேருந்து சாரதி  கைது செய்யப்பட்டுள்ளார்.


கல்வி கற்கச் சென்ற யுவதி விபத்தில் பலி; தந்தை படுகாயம் அனுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் தந்தை படுகாயமடைந்துள்ளார்.அனுராதபுரம், பந்துலகமவில் உள்ள அரச உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் படித்து வந்த எப்பாவல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சந்தரேகா சுபோதனி ஹேமந்தா என்ற யுவதியே உயிரிழந்தார்.கல்னேவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.இதன்போது மோட்டார் சைக்கியில் சென்ற மகள் உயிரிழந்ததாகவும், தந்தை படுகாயமடைந்ததாகவும் அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.தந்தையுடன் ஒரு பாடநெறியில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் படுகாயமடைந்த யுவதி அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் 35 வயதுடைய பேருந்து சாரதி  கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement