• Jul 15 2025

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

Chithra / Jul 14th 2025, 8:48 am
image

 

இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை அமைப்பை உருவாக்குவதற்கான கேள்விப்பத்திரத்தை, அரசாங்கம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.  

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய விமல் வீரவங்ச, 

இந்த தீர்மானம் காரணமாக, கைரேகைகள், விழித்திரை ஸ்கேன் மற்றும் குடியிருப்பு விபரங்கள் போன்ற முக்கிய தகவல்கள் உட்பட இலங்கை குடிமக்களின் மிகவும் உணர்திறன் வாய்ந்த தனிப்பட்ட தரவுகளை இந்திய நிறுவனத்தால் அறிந்துகொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்நாட்டிலேயே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 99 சதவீத தொழில்நுட்ப அமைப்புகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 

எனினும், தற்போதைய நிர்வாகம் வேண்டுமென்றே உள்நாட்டு அமைப்பை ஓரங்கட்டி, இந்தியாவின் தேசிய ஸ்மார்ட் நிறுவனத்துக்கு இந்தப் பணியை வழங்கியுள்ளது.

உலகில் தற்போது தரவு திருட்டு பிரதான மோசடியாக காணப்படுகிறது. ஆட்பதிவுத் திணைக்களம் சுமார் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை  புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு  இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை அமைப்பை உருவாக்குவதற்கான கேள்விப்பத்திரத்தை, அரசாங்கம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.  ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய விமல் வீரவங்ச, இந்த தீர்மானம் காரணமாக, கைரேகைகள், விழித்திரை ஸ்கேன் மற்றும் குடியிருப்பு விபரங்கள் போன்ற முக்கிய தகவல்கள் உட்பட இலங்கை குடிமக்களின் மிகவும் உணர்திறன் வாய்ந்த தனிப்பட்ட தரவுகளை இந்திய நிறுவனத்தால் அறிந்துகொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டிலேயே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 99 சதவீத தொழில்நுட்ப அமைப்புகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எனினும், தற்போதைய நிர்வாகம் வேண்டுமென்றே உள்நாட்டு அமைப்பை ஓரங்கட்டி, இந்தியாவின் தேசிய ஸ்மார்ட் நிறுவனத்துக்கு இந்தப் பணியை வழங்கியுள்ளது.உலகில் தற்போது தரவு திருட்டு பிரதான மோசடியாக காணப்படுகிறது. ஆட்பதிவுத் திணைக்களம் சுமார் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை  புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement