• May 18 2024

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!samugammedia

Sharmi / Apr 5th 2023, 7:57 pm
image

Advertisement

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கான புதிய தகவல் ஒன்றை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடொ வெளியிட்டுள்ளார்.

இதுவரை இல்லாத அளவிற்கு குடியேறிகளை வரவேற்பதற்கு கனடா தயாராக உள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நடைமுறைகள் சரியான கிரமமான அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட எட்டு குடியேறிகள் கனேடிய எல்லைப் பகுதி நதியொன்றில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த மரணங்கள் பெரும் கவலையளிப்பதாக அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குடிவரவு முறைமையில் நம்பகத்தன்மையை பேண வேண்டிய கடப்பாடு கனடாவிற்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, கிரமமான முறையில் பெருந்தொகை குடியேறிகளுக்கு கனடாவில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்திsamugammedia கனடாவில் குடியேற காத்திருப்போருக்கான புதிய தகவல் ஒன்றை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடொ வெளியிட்டுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு குடியேறிகளை வரவேற்பதற்கு கனடா தயாராக உள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த நடைமுறைகள் சரியான கிரமமான அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட எட்டு குடியேறிகள் கனேடிய எல்லைப் பகுதி நதியொன்றில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இந்த மரணங்கள் பெரும் கவலையளிப்பதாக அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். குடிவரவு முறைமையில் நம்பகத்தன்மையை பேண வேண்டிய கடப்பாடு கனடாவிற்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, கிரமமான முறையில் பெருந்தொகை குடியேறிகளுக்கு கனடாவில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement