• Nov 23 2024

அரசியல் சூழ்ச்சியினால் தான் கோட்டாபய அரசாங்கம் வீழ்த்தப்பட்டது! -கூறுகின்றார் நாமல்

Chithra / Jun 9th 2024, 11:23 am
image


ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசியல் செய்யும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பிரதான எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன. ஊழல் இல்லாத அரச நிர்வாகத்தை எம்மால் உருவாக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ரத்தொட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ரத்தொட்ட பகுதியில் நடத்தினார். ஆகவே எமது அரசியல் பயணத்தில் ரத்தொட்ட பகுதி இன்றியமையாதது.

69 இலட்ச மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். 

உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி தேசிய தொழிற்றுறையை மேம்படுத்திக்கொண்டிருந்த வேளை துரதிர்ஷ்டவசமாக கொவிட் பெருந்தொற்று தாக்கத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

கொவிட் பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை நன்கு அறிவோம். 

கொவிட் பெருந்தொற்று தாக்கத்துடன் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ஒரு தரப்பினர் தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டார்கள்.

அரசியல் சூழ்ச்சியினால் தான் எமது அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. 

நெருக்கடியான தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக தற்காலிக தீர்மானத்தை எடுத்தோம். சர்வதேச நாணய நிதியத்தை மாத்திரம் கொண்டு பொருளாதார ரீதியான தீர்மானங்களை எடுக்க முடியாது.

நாட்டுக்கு எதிரான எவ்வித தீர்மானங்களையும் நாங்கள் எடுக்க போவதில்லை. 

நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பினை நாங்கள் ஏற்போம். 30 வருடகால யுத்தத்தை நிறைவு செய்து நாட்டை அபிவிருத்தியடையச் செய்த தலைவர் எம்மிடம் உள்ளார். என்றார்.


அரசியல் சூழ்ச்சியினால் தான் கோட்டாபய அரசாங்கம் வீழ்த்தப்பட்டது -கூறுகின்றார் நாமல் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசியல் செய்யும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பிரதான எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன. ஊழல் இல்லாத அரச நிர்வாகத்தை எம்மால் உருவாக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.ரத்தொட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ரத்தொட்ட பகுதியில் நடத்தினார். ஆகவே எமது அரசியல் பயணத்தில் ரத்தொட்ட பகுதி இன்றியமையாதது.69 இலட்ச மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி தேசிய தொழிற்றுறையை மேம்படுத்திக்கொண்டிருந்த வேளை துரதிர்ஷ்டவசமாக கொவிட் பெருந்தொற்று தாக்கத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டது.கொவிட் பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை நன்கு அறிவோம். கொவிட் பெருந்தொற்று தாக்கத்துடன் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ஒரு தரப்பினர் தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டார்கள்.அரசியல் சூழ்ச்சியினால் தான் எமது அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. நெருக்கடியான தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக தற்காலிக தீர்மானத்தை எடுத்தோம். சர்வதேச நாணய நிதியத்தை மாத்திரம் கொண்டு பொருளாதார ரீதியான தீர்மானங்களை எடுக்க முடியாது.நாட்டுக்கு எதிரான எவ்வித தீர்மானங்களையும் நாங்கள் எடுக்க போவதில்லை. நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பினை நாங்கள் ஏற்போம். 30 வருடகால யுத்தத்தை நிறைவு செய்து நாட்டை அபிவிருத்தியடையச் செய்த தலைவர் எம்மிடம் உள்ளார். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement