• Nov 15 2024

சுகாதாரத் துறையில் நெருக்கடி- நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Chithra / Sep 3rd 2024, 9:36 am
image

 

அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இது இடம்பெற்றுள்ளது.

அதன்படி இன்று 12.00 மணி முதல் 2.00 மணி வரை வைத்தியசாலைகளுக்கு முன்பாக இந்த  போராட்டம் நடத்தப்பட உள்ளன.

அதன்படி காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை, தங்காலை அடிப்படை வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை, ஹலவத்தை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பதுளை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை, கேகாலை பொது வைத்தியசாலை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதேவேளை பொலன்னறுவை பொது வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு வைத்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சுகாதாரத் துறையில் நெருக்கடி- நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இது இடம்பெற்றுள்ளது.அதன்படி இன்று 12.00 மணி முதல் 2.00 மணி வரை வைத்தியசாலைகளுக்கு முன்பாக இந்த  போராட்டம் நடத்தப்பட உள்ளன.அதன்படி காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை, தங்காலை அடிப்படை வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை, ஹலவத்தை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பதுளை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை, கேகாலை பொது வைத்தியசாலை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.இதேவேளை பொலன்னறுவை பொது வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு வைத்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement