• May 09 2024

மாவீரர் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல கோழைத்தனம் - சரத் வீரசேகர samugammedia

Chithra / Nov 24th 2023, 9:04 am
image

Advertisement


மாவீரத் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது  கோழைத்தனம் என  தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் 

பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும். ஆனால் இன்று அவருக்கு அரசியலமைப்பு பேரவையினால் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாத நிலை காணப்படுகிறது. 

இதனால் தான் நான் அரசியலமைப்பின் 19  ஆவது திருத்தத்துக்கும், 21 ஆவது திருத்தத்துக்கும் எதிராக வாக்களித்தேன்.

மேலும் யுத்ததை வெற்றிக் கொண்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் விசா வழங்குவதில்லை. 

இராணுவ அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது. இந்நிலை தற்போதை இராணுவ அதிகாரிகளுக்கும் சேவை ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை அழித்துள்ளோம். 

இலங்கையிலிருந்து  புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும். புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் இன்றும்  துடிப்புடன் உள்ளார்கள்.

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் அதனை எதிர்கொள்வதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளார்களா? என்பதை ஆராய வேண்டும். 

மாவீரர் தினம் என்று குறிப்பிட்டுக் கொண்டு இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரும் முயற்சிக்கிறார்கள். 

விடுதலை புலிகள் தமிழர்களை பயணக் கைதிகளாக வைத்திருந்த போது இவர்கள் எங்கு சென்றார்கள். 

2 இலட்சத்து 95 ஆயிரம் பேரை இராணுவத்தினர் மீள்குடியேற்றம் செய்தார்கள். 8000 தமிழர்களுக்கு இராணுவத்தினர் தமது சொந்த நிதியில் வீடு கட்டிக் கொடுத்தார்கள். அப்போது கூட்டமைப்பினர் தமிழ் தேசியம் பற்றி பேசிக் கொண்டு வரவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


மாவீரர் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல கோழைத்தனம் - சரத் வீரசேகர samugammedia மாவீரத் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது  கோழைத்தனம் என  தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர  தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும். ஆனால் இன்று அவருக்கு அரசியலமைப்பு பேரவையினால் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் தான் நான் அரசியலமைப்பின் 19  ஆவது திருத்தத்துக்கும், 21 ஆவது திருத்தத்துக்கும் எதிராக வாக்களித்தேன்.மேலும் யுத்ததை வெற்றிக் கொண்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் விசா வழங்குவதில்லை. இராணுவ அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது. இந்நிலை தற்போதை இராணுவ அதிகாரிகளுக்கும் சேவை ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை அழித்துள்ளோம். இலங்கையிலிருந்து  புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும். புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் இன்றும்  துடிப்புடன் உள்ளார்கள்.இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் அதனை எதிர்கொள்வதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளார்களா என்பதை ஆராய வேண்டும். மாவீரர் தினம் என்று குறிப்பிட்டுக் கொண்டு இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரும் முயற்சிக்கிறார்கள். விடுதலை புலிகள் தமிழர்களை பயணக் கைதிகளாக வைத்திருந்த போது இவர்கள் எங்கு சென்றார்கள். 2 இலட்சத்து 95 ஆயிரம் பேரை இராணுவத்தினர் மீள்குடியேற்றம் செய்தார்கள். 8000 தமிழர்களுக்கு இராணுவத்தினர் தமது சொந்த நிதியில் வீடு கட்டிக் கொடுத்தார்கள். அப்போது கூட்டமைப்பினர் தமிழ் தேசியம் பற்றி பேசிக் கொண்டு வரவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement