• May 18 2024

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா போன்ற சிறந்த பிரதிநிதிகள் தேவை...! ஐ.நா. தலைவர் புகழாரம்...!samugammedia

Sharmi / Jun 20th 2023, 10:33 am
image

Advertisement

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்ளிட்ட சிறந்த பிரதிநிதித்துவ நாடுகள் தேவைப்படுவதாக  ஐ.நா. பொது சபைத்  தலைவர் சாபா கொரோசி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் அளித்த பேட்டியொன்றில்,

அமைதி, மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான பெரிய பொறுப்புகளை கொண்டுள்ள நாடுகளை உள்ளடக்கிய உறுப்பினர்கள் பாதுகாப்பு கவுன்சிலின் சிறந்த பிரதிநிதித்துவத்திற்கு தேவையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவற்றில் உலக மக்களின் வசதிக்காக பங்காற்றுவோம் என்ற நம்பிக்கையை உடைய  இந்தியா போன்ற நாடுகளும் உள்ளடங்கும்  என்று கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஆரம்பிக்கப்பட்ட  கடந்த காலத்தில், பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இல்லை என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீர்திருத்தத்திற்கு தேவையான ஆற்றல் மிக்க முதலாவது விவாதம் தொடங்கி 40 ஆண்டுகளுக்கு அதிகமாவதாக தெரிவித்துள்ளார்.

அதற்கான பேச்சுவார்த்தைக்கான நடைமுறை 13 ஆண்டுகளாக, மிக நீண்ட காலம் நடந்து வருவதாகவும் அது உறுப்பினர் நாடுகளின் கைகளிலே  உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா போன்ற சிறந்த பிரதிநிதிகள் தேவை. ஐ.நா. தலைவர் புகழாரம்.samugammedia ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்ளிட்ட சிறந்த பிரதிநிதித்துவ நாடுகள் தேவைப்படுவதாக  ஐ.நா. பொது சபைத்  தலைவர் சாபா கொரோசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் அளித்த பேட்டியொன்றில், அமைதி, மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான பெரிய பொறுப்புகளை கொண்டுள்ள நாடுகளை உள்ளடக்கிய உறுப்பினர்கள் பாதுகாப்பு கவுன்சிலின் சிறந்த பிரதிநிதித்துவத்திற்கு தேவையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவற்றில் உலக மக்களின் வசதிக்காக பங்காற்றுவோம் என்ற நம்பிக்கையை உடைய  இந்தியா போன்ற நாடுகளும் உள்ளடங்கும்  என்று கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஆரம்பிக்கப்பட்ட  கடந்த காலத்தில், பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இல்லை என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்தத்திற்கு தேவையான ஆற்றல் மிக்க முதலாவது விவாதம் தொடங்கி 40 ஆண்டுகளுக்கு அதிகமாவதாக தெரிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைக்கான நடைமுறை 13 ஆண்டுகளாக, மிக நீண்ட காலம் நடந்து வருவதாகவும் அது உறுப்பினர் நாடுகளின் கைகளிலே  உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement