• May 18 2024

கொழும்பில் பெரும் பதற்றம்...! பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பெருமளவில் பொலிஸார் குவிப்பு...!samugammedia

Sharmi / Oct 2nd 2023, 4:25 pm
image

Advertisement

கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சமூக ஊடகங்கள் மற்றும் பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சில தரப்பினரால் கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், செரமிக் சந்தி, சுற்றுவட்டம் வரையும் அங்கிருந்து பாலதக்ச மாவத்தைக்குள்ளும் செல்வதை தடுக்கும் விதமாக கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்த நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மதுஷன் சந்திரஜித், கல்வெவ சிறிதம்ம தேரர், துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின், தம்மிக்க முனசிங்க, தென்னே ஞானானந்த தேரர் உள்ளிட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொழும்பில் பெரும் பதற்றம். பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பெருமளவில் பொலிஸார் குவிப்பு.samugammedia கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சம்பவ இடத்தில் பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சமூக ஊடகங்கள் மற்றும் பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சில தரப்பினரால் கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், செரமிக் சந்தி, சுற்றுவட்டம் வரையும் அங்கிருந்து பாலதக்ச மாவத்தைக்குள்ளும் செல்வதை தடுக்கும் விதமாக கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்த நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.மதுஷன் சந்திரஜித், கல்வெவ சிறிதம்ம தேரர், துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின், தம்மிக்க முனசிங்க, தென்னே ஞானானந்த தேரர் உள்ளிட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement