வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றையதினம்(27) கொழும்பிலுள்ள பிரபல விடுதியொன்றில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைகள் மற்றும் டிஜிட்டல் மூலோபாயங்கள், அவற்றின் வினைத்திறனான மற்றும் சூழல்நேய பயன்பாடு மற்றும் இந்த வலுசக்தி முறைகளின் ஊடாக நாட்டின் பொருளாதார ஆற்றலை எவ்வாறு உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
"மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முகாமைத்துவம் குறித்த செயல் திட்டத்தை வெளியிடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நேரத்தில், இந்த திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக மாத்திரம் நாங்கள் ஒன்றுசேரவில்லை. எதிர்காலத்தில், நம் நாட்டில் சக்திவள மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபேறான வலு அதிகார சபை ஆகியவை இலங்கையை நிலையான வலுசக்தி பாவனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னின்று பங்களித்தன.
"வலுசக்தி அமைச்சு இந்த "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" என்ற ஐந்தாண்டுகளுக்கான செயல் திட்டத்தை முன்வைத்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இதன் மூலம் வலுசக்தியின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அந்த வலுசக்தியை அடையாளம் காணவும், வலுசக்தி பாதுகாப்பு மற்றும் சேமிப்பு முறைகள் பற்றிய விரிவான புரிதலை வழங்கவும் வழி ஏற்படும்.
மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.
அடுத்த ஐந்து வருடங்களுக்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரித்து அனைத்து இலங்கையர்களுக்கும் மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதே எமது நோக்கமாகும்.
எமது வலுசக்தி தொடர்பான சட்டங்கள் மூன்று முக்கிய வழிகளில் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது, சூரிய சக்தி, காற்றாலை சக்தி மற்றும் நீர் போன்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளத்தைப் பயன்படுத்தி, குறைந்த அளவு கார்பன் சூழலுக்கு வெளியேற்றும் வகையில் மலிவு விலையிலும் நம்பகத்தன்மையுடனும் வகையில் வலுசக்தியை வழங்க வேண்டும். இரண்டாவதாக, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, டிஜிட்டல் மூலோபாயங்கள் போன்ற திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் நவீன முறைகளின் கீழ் எவ்வாறு நம்பகத்தன்மையுடன் வலுசக்தி வடிவங்களைப் பெறுவது என்பது பற்றி மக்களுக்குதெ ளிவூட்டுதல். மூன்றாவது வலுசக்தி துறையில் மாற்றத்திற்கான நவீன முறைகளை அறிமுகப்படுத்துதல். இன்று உலகில் பல முன்னேற்றமான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன, நவீன உலகத்துடன் வலுவான போட்டித்தன்மையுடன் வலுசக்தி துறையை உருவாக்க அவற்றை நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
இது வெறுமனே ஒரு திட்டம் மட்டுமல்ல, 5 ஆண்டுகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி. வலுசக்திகளை அடையாளம் காணுதல், அவற்றை அபிவிருத்திசெய்தல், மக்களுக்கு அறிமுகம்செய்தல், அதற்காக செலவிடப்படும் காலம், ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் தேவையான சட்டங்கள் போன்ற பல விடயங்கள் இதில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்புகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை வெற்றியடையச்செய்ய வேண்டும். மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைமைகளைப் பயன்படுத்தி அனைத்து இலங்கையர்களின் வலுசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்."
இந்நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பிரதி அமைச்சர்களான எரங்க வீரரத்ன, ஜனித் ருவன் கொடித்துவக்கு வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
''பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம். வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றையதினம்(27) கொழும்பிலுள்ள பிரபல விடுதியொன்றில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைகள் மற்றும் டிஜிட்டல் மூலோபாயங்கள், அவற்றின் வினைத்திறனான மற்றும் சூழல்நேய பயன்பாடு மற்றும் இந்த வலுசக்தி முறைகளின் ஊடாக நாட்டின் பொருளாதார ஆற்றலை எவ்வாறு உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும்.இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,"மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முகாமைத்துவம் குறித்த செயல் திட்டத்தை வெளியிடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த நேரத்தில், இந்த திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக மாத்திரம் நாங்கள் ஒன்றுசேரவில்லை. எதிர்காலத்தில், நம் நாட்டில் சக்திவள மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபேறான வலு அதிகார சபை ஆகியவை இலங்கையை நிலையான வலுசக்தி பாவனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னின்று பங்களித்தன."வலுசக்தி அமைச்சு இந்த "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" என்ற ஐந்தாண்டுகளுக்கான செயல் திட்டத்தை முன்வைத்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.இதன் மூலம் வலுசக்தியின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அந்த வலுசக்தியை அடையாளம் காணவும், வலுசக்தி பாதுகாப்பு மற்றும் சேமிப்பு முறைகள் பற்றிய விரிவான புரிதலை வழங்கவும் வழி ஏற்படும்.மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.அடுத்த ஐந்து வருடங்களுக்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரித்து அனைத்து இலங்கையர்களுக்கும் மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதே எமது நோக்கமாகும்.எமது வலுசக்தி தொடர்பான சட்டங்கள் மூன்று முக்கிய வழிகளில் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது, சூரிய சக்தி, காற்றாலை சக்தி மற்றும் நீர் போன்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளத்தைப் பயன்படுத்தி, குறைந்த அளவு கார்பன் சூழலுக்கு வெளியேற்றும் வகையில் மலிவு விலையிலும் நம்பகத்தன்மையுடனும் வகையில் வலுசக்தியை வழங்க வேண்டும். இரண்டாவதாக, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, டிஜிட்டல் மூலோபாயங்கள் போன்ற திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் நவீன முறைகளின் கீழ் எவ்வாறு நம்பகத்தன்மையுடன் வலுசக்தி வடிவங்களைப் பெறுவது என்பது பற்றி மக்களுக்குதெ ளிவூட்டுதல். மூன்றாவது வலுசக்தி துறையில் மாற்றத்திற்கான நவீன முறைகளை அறிமுகப்படுத்துதல். இன்று உலகில் பல முன்னேற்றமான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன, நவீன உலகத்துடன் வலுவான போட்டித்தன்மையுடன் வலுசக்தி துறையை உருவாக்க அவற்றை நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்த வேண்டும்.இது வெறுமனே ஒரு திட்டம் மட்டுமல்ல, 5 ஆண்டுகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி. வலுசக்திகளை அடையாளம் காணுதல், அவற்றை அபிவிருத்திசெய்தல், மக்களுக்கு அறிமுகம்செய்தல், அதற்காக செலவிடப்படும் காலம், ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் தேவையான சட்டங்கள் போன்ற பல விடயங்கள் இதில் உள்ளன.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்புகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை வெற்றியடையச்செய்ய வேண்டும். மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைமைகளைப் பயன்படுத்தி அனைத்து இலங்கையர்களின் வலுசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்."இந்நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பிரதி அமைச்சர்களான எரங்க வீரரத்ன, ஜனித் ருவன் கொடித்துவக்கு வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.