கொழும்பு - மாலபே பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (7) காலை துப்பாக்கியை சோதனை செய்யும்போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த பொலிஸ் அதிகாரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் தவறுதலாக வெடித்த துப்பாக்கி; பொலிஸ் சார்ஜன்ட் காயம் கொழும்பு - மாலபே பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார்.இன்று ஞாயிற்றுக்கிழமை (7) காலை துப்பாக்கியை சோதனை செய்யும்போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காயமடைந்த பொலிஸ் அதிகாரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.