• May 19 2024

சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

Chithra / Jan 4th 2024, 6:51 pm
image

Advertisement

 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுயத்தொழில் செய்யக்கூடிய குடும்பங்களை மேம்படுத்துவதற்காக பிரதேச செயலாளர்கள் ஊடாக நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டமும் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக 10 மாதாந்த தவணை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, தெரிவு செய்யப்பட்ட 5,000 மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல். ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை  கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு வருடங்களில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், சுயத்தொழில் செய்யக்கூடிய குடும்பங்களை மேம்படுத்துவதற்காக பிரதேச செயலாளர்கள் ஊடாக நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டமும் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக 10 மாதாந்த தவணை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.இதன்படி, தெரிவு செய்யப்பட்ட 5,000 மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement