• Nov 23 2024

அரசாங்க மக்கள் தொடர்மாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

Chithra / Jan 7th 2024, 3:11 pm
image

 

அரசாங்க தொடர்மாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கான வீட்டு உரிமை பத்திரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களில் 50 சதவீதமானோருக்கு வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

அந்த அதிகாரசபைக்கு சொந்தமான தொடர்மாடி குடியிருப்பில் 14542 குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களில் 50 சதவீதமானோருக்கு இவ்வாறு வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

ஏனைய தொடர்மாடி குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள சட்ட மற்றும் பிற சிக்கல்களைத் தீர்ப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த முதல் உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்க மக்கள் தொடர்மாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்  அரசாங்க தொடர்மாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கான வீட்டு உரிமை பத்திரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த வருட இறுதிக்குள் தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களில் 50 சதவீதமானோருக்கு வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.அந்த அதிகாரசபைக்கு சொந்தமான தொடர்மாடி குடியிருப்பில் 14542 குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களில் 50 சதவீதமானோருக்கு இவ்வாறு வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.ஏனைய தொடர்மாடி குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள சட்ட மற்றும் பிற சிக்கல்களைத் தீர்ப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இதேவேளை, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த முதல் உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement