• Nov 25 2024

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! வானிலையில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்..!

Chithra / Dec 13th 2023, 3:40 pm
image

 

நாளை  முதல் அடுத்த சில நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலையில் தற்காலிக அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை பலத்த மழையால் நில்வலா கங்கை மற்றும் களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அந்த ஆறுகளை அண்மித்து வாழும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளத்தினால் தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ இடைமாறலின் வெலிகம முதல் கனங்கே வரையான பகுதியில் இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. வானிலையில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்.  நாளை  முதல் அடுத்த சில நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலையில் தற்காலிக அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.கிழக்கு, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்.மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை பலத்த மழையால் நில்வலா கங்கை மற்றும் களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அந்த ஆறுகளை அண்மித்து வாழும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே, வெள்ளத்தினால் தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ இடைமாறலின் வெலிகம முதல் கனங்கே வரையான பகுதியில் இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement