• May 18 2024

யாழ். கந்தரோடை பகுதியில் லக்சுமி நாணயங்கள் மீட்பு! samugammedia

Chithra / Aug 7th 2023, 5:09 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கி.பி. 1ஆம் – கி.பி 3ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினர், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து கடந்த ஒரு மாத கால பகுதியாக கந்தரோடை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது , கி.பி. 1ஆம் – கி.பி. 3ஆம் நூற்றாண்டு கால பகுதிக்கு இடைப்பட்டதாக கருதப்படும் லக்சுமி நாணயங்கள் 05 மீட்கப்பட்டுள்ளன.

1917ஆம் ஆண்டளவில் கந்தரோடை பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட “போல் பீரிஸ்” நாணயங்கள் சிலவற்றை கண்டு பிடித்த போது , அவற்றில் பெண்ணொருவர் தாமரை மலர் மீது நிற்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டதை ஆதாரமாக காட்டி , அவருக்கு லக்சுமி நாணயம் என பெயர் வைத்தார்.


யாழ். கந்தரோடை பகுதியில் லக்சுமி நாணயங்கள் மீட்பு samugammedia யாழ்ப்பாணம் - கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கி.பி. 1ஆம் – கி.பி 3ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினர், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து கடந்த ஒரு மாத கால பகுதியாக கந்தரோடை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது , கி.பி. 1ஆம் – கி.பி. 3ஆம் நூற்றாண்டு கால பகுதிக்கு இடைப்பட்டதாக கருதப்படும் லக்சுமி நாணயங்கள் 05 மீட்கப்பட்டுள்ளன.1917ஆம் ஆண்டளவில் கந்தரோடை பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட “போல் பீரிஸ்” நாணயங்கள் சிலவற்றை கண்டு பிடித்த போது , அவற்றில் பெண்ணொருவர் தாமரை மலர் மீது நிற்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டதை ஆதாரமாக காட்டி , அவருக்கு லக்சுமி நாணயம் என பெயர் வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement