• May 18 2024

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்..! samugammedia

Chithra / Nov 9th 2023, 11:08 am
image

Advertisement

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நிறுத்தப்பட்ட நிகழ்வை மீண்டும் நடத்தக்கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் ஒன்று தற்போது பல்கலைக்கழக விஞ்ஞான பீட  வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலையங்கத்திலே விரிவுரையாற்ற இருந்தார். 

குறித்த சட்டத்தரணி பொதுவெளியில்  தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உட்பட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி குறித்த நிகழ்வு  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நிறுத்தப்பட்டது. 

அதன் பின்னர் குறித்த விரிவுரையை பல்கலைக்கழகத்துக்குள் நடத்த அனுமதித்தாகவேண்டும் என பொதுக்கடிதம் ஒன்றை குறித்த சட்டத்தரணி வெளியிட்டார். 

அதனைத்தொடர்ந்து, குறித்த சட்டத்தரணி  மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது விரிவுரையினை  வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தது. 

மாணவர்களால் நிறுத்தப்பட்ட நிகழ்வை நடத்தக்கோர மாணவர்களின் முடிவுக்கு எதிராக ஆசிரியர் சங்கம் விடுத்த அந்த அறிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

குறித்த விடயத்தை நேரடியாகப் பேசித்தீர்ப்பதற்காக ஆசிரியர் சங்கத்தை மாணவர்கள் கோரிய நிலையில் அவர்களை பொதுவெளிக்கு மாணவர்கள் அழைத்துள்ளார்கள் அதுவரை போராட்டம் தொடருமென மாணவர்கள் அறிவித்துள்ளார்கள்.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம். samugammedia யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நிறுத்தப்பட்ட நிகழ்வை மீண்டும் நடத்தக்கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் ஒன்று தற்போது பல்கலைக்கழக விஞ்ஞான பீட  வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலையங்கத்திலே விரிவுரையாற்ற இருந்தார். குறித்த சட்டத்தரணி பொதுவெளியில்  தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உட்பட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி குறித்த நிகழ்வு  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் குறித்த விரிவுரையை பல்கலைக்கழகத்துக்குள் நடத்த அனுமதித்தாகவேண்டும் என பொதுக்கடிதம் ஒன்றை குறித்த சட்டத்தரணி வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து, குறித்த சட்டத்தரணி  மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது விரிவுரையினை  வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தது. மாணவர்களால் நிறுத்தப்பட்ட நிகழ்வை நடத்தக்கோர மாணவர்களின் முடிவுக்கு எதிராக ஆசிரியர் சங்கம் விடுத்த அந்த அறிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. குறித்த விடயத்தை நேரடியாகப் பேசித்தீர்ப்பதற்காக ஆசிரியர் சங்கத்தை மாணவர்கள் கோரிய நிலையில் அவர்களை பொதுவெளிக்கு மாணவர்கள் அழைத்துள்ளார்கள் அதுவரை போராட்டம் தொடருமென மாணவர்கள் அறிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement