• Nov 26 2024

யாழ். நெல்லியடியில் புடவைக்கடைக்கு தீ வைத்த வன்முறை கும்பல் - பெறுமதியான ஆடைகள் எரிந்து நாசம்

Chithra / Oct 3rd 2024, 1:06 pm
image

 

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டதில், கடையில் இருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

நெல்லியடி சந்தைக்கு அண்மையில் உள்ள புடவைக்கடைக்குள் நேற்று புதன்கிழமை (02)  இரவு, மூவர் அடங்கிய வன்முறை கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஆடைகள் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.

தீ வேகமாக பரவியதில் அங்கிருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கடந்த வாரம் குறித்த புடவைக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ஆடைகளுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைக்க முற்பட்டவேளை கடையில் நின்றவர்கள் சுதாகரித்து கொண்டு, அவர்களை பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் நேற்றையதினம் வன்முறை கும்பல் குறித்த புடவைக்கடைக்கு தீ வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

யாழ். நெல்லியடியில் புடவைக்கடைக்கு தீ வைத்த வன்முறை கும்பல் - பெறுமதியான ஆடைகள் எரிந்து நாசம்  யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டதில், கடையில் இருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.நெல்லியடி சந்தைக்கு அண்மையில் உள்ள புடவைக்கடைக்குள் நேற்று புதன்கிழமை (02)  இரவு, மூவர் அடங்கிய வன்முறை கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஆடைகள் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.தீ வேகமாக பரவியதில் அங்கிருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதேவேளை கடந்த வாரம் குறித்த புடவைக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ஆடைகளுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைக்க முற்பட்டவேளை கடையில் நின்றவர்கள் சுதாகரித்து கொண்டு, அவர்களை பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் மீண்டும் நேற்றையதினம் வன்முறை கும்பல் குறித்த புடவைக்கடைக்கு தீ வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement