எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்பட வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவதால், ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாச தொடர்ச்சியாக இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும், இரண்டு பொதுத் தேர்தல்களிலும் தோல்வியடைந்த நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சஜித் பிரேமதாச இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆளும் கட்சிக்கு 2/3 அதிகாரம் கிடைப்பதை தடுக்க முடியவில்லை.
அத்துடன் எதிர்க்கட்சி தலைவரின் அதிகாரத்தின் கீழ் பல விடயங்களை நாடாளுமன்றத்தில் தலையிட்டு விவாதித்த போதும் அது மக்களை கவரவில்லை.
இந்த செயற்பாடுகள் சஜித்தை ஆதரிக்கும் மக்கள் மத்தியில் விரத்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய பிரபல, படித்த, புத்திசாலித்தனமான நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதன் மூலம் அரசாங்கத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஹர்ஷவுக்கு; சஜித் அணிக்குள் கடும் குழப்பம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்பட வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவதால், ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.சஜித் பிரேமதாச தொடர்ச்சியாக இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும், இரண்டு பொதுத் தேர்தல்களிலும் தோல்வியடைந்த நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சஜித் பிரேமதாச இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆளும் கட்சிக்கு 2/3 அதிகாரம் கிடைப்பதை தடுக்க முடியவில்லை.அத்துடன் எதிர்க்கட்சி தலைவரின் அதிகாரத்தின் கீழ் பல விடயங்களை நாடாளுமன்றத்தில் தலையிட்டு விவாதித்த போதும் அது மக்களை கவரவில்லை.இந்த செயற்பாடுகள் சஜித்தை ஆதரிக்கும் மக்கள் மத்தியில் விரத்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.அதற்கமைய பிரபல, படித்த, புத்திசாலித்தனமான நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதன் மூலம் அரசாங்கத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.