• May 18 2024

சுகாதார அமைச்சர் கெஹலிய பதவி விலக வேண்டும்! பகிரங்கமாக குற்றம்சாட்டிய மருத்துவர் samugammedia

Chithra / Jul 3rd 2023, 9:55 pm
image

Advertisement

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதவி விலக வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டு நிலைக்கு அமைச்சர் கெஹலிய பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்துப் பொருள் அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகவும் அந்த விடயம் அமைச்சருக்கு தெரியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

லஞ்சம் வாங்கும் நடவடிக்கை கைவிடப்படவில்லை எனவும், மருந்துப் பொருட்களின் தரம் குறைவடைந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு அறையிலிருந்து மற்றுமொரு அறைக்கு ஆவணங்களை கொண்டுசெல்ல குறைந்தபட்சம் 5000 ரூபா லஞ்சம் வழங்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரினால் இவற்றை நிறுத்த முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தரம் குறைந்த மருந்துப் பொருள் இறக்குமதியினால் கண்பார்வை இழந்த நோயாளிகளுக்கு அரசாங்கப் பணத்தில் நட்டஈடு வழங்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களிடம் நட்டஈடு பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

சுகாதார அமைச்சர் கெஹலிய பதவி விலக வேண்டும் பகிரங்கமாக குற்றம்சாட்டிய மருத்துவர் samugammedia சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதவி விலக வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவி வரும் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டு நிலைக்கு அமைச்சர் கெஹலிய பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.தேசிய மருந்துப் பொருள் அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகவும் அந்த விடயம் அமைச்சருக்கு தெரியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.லஞ்சம் வாங்கும் நடவடிக்கை கைவிடப்படவில்லை எனவும், மருந்துப் பொருட்களின் தரம் குறைவடைந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.ஒரு அறையிலிருந்து மற்றுமொரு அறைக்கு ஆவணங்களை கொண்டுசெல்ல குறைந்தபட்சம் 5000 ரூபா லஞ்சம் வழங்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.அமைச்சரினால் இவற்றை நிறுத்த முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டுமென தெரிவித்துள்ளார்.தரம் குறைந்த மருந்துப் பொருள் இறக்குமதியினால் கண்பார்வை இழந்த நோயாளிகளுக்கு அரசாங்கப் பணத்தில் நட்டஈடு வழங்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களிடம் நட்டஈடு பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement