• May 05 2024

அமெரிக்காவில் பல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான விருது வென்று சாதனை படைத்த இலங்கையர்! samugammedia

Chithra / Jul 3rd 2023, 10:08 pm
image

Advertisement

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இலங்கை ஆய்வாளரான கலாநிதி கஸ்ஸப அல்லேபொல, பல் ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கத்தின் பல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான விருதை வென்றுள்ளார்.

கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவ ஆராய்ச்சி சங்கத்தின் 101வது மாநாட்டில் கஸ்ஸபவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அல்லேபொலவின் ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச பல் ஆராய்ச்சி சங்கம் 50,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

கலாநிதி அல்லேபொல கண்டி திரித்துவக்கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், களனி பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரி ஆவார்.

இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், அமெரிக்காவின் லுசியானா மாநில பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 

அல்லெபொல மற்றும் அவரது ஆலோசகர் பேராசிரியர் ரஸ்ஸல் பெசவென்டோ ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய நானோ கலவை உமிழ்நீர் சுரப்பு குறைபாடு காரணமாக வாய் வறண்ட நோயாளிகளுக்கு உமிழ்நீரின் உயிர்வேதியியல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில் பல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான விருது வென்று சாதனை படைத்த இலங்கையர் samugammedia அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இலங்கை ஆய்வாளரான கலாநிதி கஸ்ஸப அல்லேபொல, பல் ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கத்தின் பல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான விருதை வென்றுள்ளார்.கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவ ஆராய்ச்சி சங்கத்தின் 101வது மாநாட்டில் கஸ்ஸபவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும், அல்லேபொலவின் ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச பல் ஆராய்ச்சி சங்கம் 50,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.கலாநிதி அல்லேபொல கண்டி திரித்துவக்கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், களனி பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரி ஆவார்.இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், அமெரிக்காவின் லுசியானா மாநில பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அல்லெபொல மற்றும் அவரது ஆலோசகர் பேராசிரியர் ரஸ்ஸல் பெசவென்டோ ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய நானோ கலவை உமிழ்நீர் சுரப்பு குறைபாடு காரணமாக வாய் வறண்ட நோயாளிகளுக்கு உமிழ்நீரின் உயிர்வேதியியல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement