• Nov 23 2024

நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் குதித்த சுகாதார ஊழியர்கள்..!

Chithra / Jan 9th 2024, 8:39 am
image

 

வைத்தியர்களின் கொடுப்பனவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இரசாயன ஆய்வாளர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க வல்லுநர்கள், உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பாரபட்சமின்றி அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பணிப்புறக்கணிப்பை தொடர்வதா? என்பது தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் குதித்த சுகாதார ஊழியர்கள்.  வைத்தியர்களின் கொடுப்பனவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இரசாயன ஆய்வாளர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க வல்லுநர்கள், உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.பாரபட்சமின்றி அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், பணிப்புறக்கணிப்பை தொடர்வதா என்பது தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement