• Nov 26 2024

இலங்கையில் இன்று கனமழை; உயர்ந்தது நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்! சிவப்பு எச்சரிக்கை

Chithra / May 19th 2024, 12:21 pm
image

 

கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மழையுடன், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

களனி கங்கை, மகாவலி கங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கையை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தெதுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, பெந்தர கங்கை, கிரம ஓயா, உரு பொக்கு ஓயா, கலா ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய கரைகளை சுற்றியுள்ள தாழ்நிலங்களும் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இன்று கனமழை; உயர்ந்தது நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சிவப்பு எச்சரிக்கை  கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.இதற்கிடையில், மழையுடன், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.களனி கங்கை, மகாவலி கங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கையை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், தெதுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, பெந்தர கங்கை, கிரம ஓயா, உரு பொக்கு ஓயா, கலா ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய கரைகளை சுற்றியுள்ள தாழ்நிலங்களும் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement