• Nov 25 2024

கொட்டித் தீர்த்த கன மழை...! 2,192 பேர் பாதிப்பு...! இடர் முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு...!samugammedia

Sharmi / Jan 20th 2024, 9:54 am
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 652 குடும்பங்களை சேர்ந்த 2,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது 

தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது 

பதுளை மாவட்டத்தில் 581 குடும்பங்களை சேர்ந்த 1944 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 74 வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது 913 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 24 குடும்பங்களை சேர்ந்த 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது 160 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 36 குடும்பங்களை சேர்ந்த 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 128 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 குடும்பங்களைசேர்ந்த 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொட்டித் தீர்த்த கன மழை. 2,192 பேர் பாதிப்பு. இடர் முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு.samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 652 குடும்பங்களை சேர்ந்த 2,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது பதுளை மாவட்டத்தில் 581 குடும்பங்களை சேர்ந்த 1944 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 74 வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது 913 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மொனராகலை மாவட்டத்தில் 24 குடும்பங்களை சேர்ந்த 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது 160 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் 36 குடும்பங்களை சேர்ந்த 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 128 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 குடும்பங்களைசேர்ந்த 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement