• Nov 25 2024

நாட்டின் 5 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

Chithra / Mar 12th 2024, 9:19 am
image

 

 

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேவேளை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கை செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் 5 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை மக்களுக்கு வெளியான எச்சரிக்கை   கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அதேவேளை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கை செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement