• Nov 28 2024

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கைகள் தடைப்படலாம்..! ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

Chithra / Feb 2nd 2024, 11:31 am
image


 

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கட்டணம் தொடர்பில் கல்வி அதிகாரிகள் நம்பகமான தீர்மானத்தை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இல்லை என்றால் விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கைகள் தடைப்படலாம் என அதன் செயலாளர் திரு.ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்படாத காரணத்தினால் சில ஆசிரியர்கள் நேற்றைய தினம் மதிப்பீட்டுப் பணியிலிருந்து விலகியதாக அவர் தெரிவித்தார்.

கடந்த முறை வழங்கப்பட்ட நாளாந்த கொடுப்பனவான 2000 ரூபாவை இம்முறையும் வழங்க அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதி பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் முதற்கட்டப் பணிகள் நேற்று ஆரம்பமானதுடன், எதிர்வரும் 13ஆம் திகதி வரை இப்பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கைகள் தடைப்படலாம். ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை  உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கட்டணம் தொடர்பில் கல்வி அதிகாரிகள் நம்பகமான தீர்மானத்தை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.இல்லை என்றால் விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கைகள் தடைப்படலாம் என அதன் செயலாளர் திரு.ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.கடந்த முறை விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்படாத காரணத்தினால் சில ஆசிரியர்கள் நேற்றைய தினம் மதிப்பீட்டுப் பணியிலிருந்து விலகியதாக அவர் தெரிவித்தார்.கடந்த முறை வழங்கப்பட்ட நாளாந்த கொடுப்பனவான 2000 ரூபாவை இம்முறையும் வழங்க அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதி பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் முதற்கட்டப் பணிகள் நேற்று ஆரம்பமானதுடன், எதிர்வரும் 13ஆம் திகதி வரை இப்பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement