• May 26 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானங்களால் ஏமாற்றமடைந்துள்ளேன்! ரோஹினி எம்.பி. அதிருப்தி

Chithra / May 25th 2025, 9:21 am
image

 

ஐக்கிய மக்கள் சக்தியின் சில தீர்மானங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனங்கள் தொடர்பில் முன்னதாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் மாற்றமடைந்துள்ளது.

தேர்தலில் கூடுதல் அளவு வாக்குகள் பெறுவோருக்கு ஆசனங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் தற்பொழுது அந்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திடீர் தீர்மானத்தினால் கட்சியின் பல அமைப்பாளர்களுக்கு கட்சி உறுப்பினர்களை எதிர்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என ரோஹினி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சில தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானங்களால் ஏமாற்றமடைந்துள்ளேன் ரோஹினி எம்.பி. அதிருப்தி  ஐக்கிய மக்கள் சக்தியின் சில தீர்மானங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.இந்த நியமனங்கள் தொடர்பில் முன்னதாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் மாற்றமடைந்துள்ளது.தேர்தலில் கூடுதல் அளவு வாக்குகள் பெறுவோருக்கு ஆசனங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் தற்பொழுது அந்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த திடீர் தீர்மானத்தினால் கட்சியின் பல அமைப்பாளர்களுக்கு கட்சி உறுப்பினர்களை எதிர்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என ரோஹினி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் சில தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement