• May 13 2024

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பாவனை - 10 மாதங்களில் கைதானோர் இத்தனை பேரா.!

Chithra / Dec 22nd 2022, 7:03 am
image

Advertisement

ஐஸ் போதைப்பொருள் தொடர்பில், 2022 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 6,000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே காலகட்டத்தில் 377 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டமை, தொடர்பில், 2022 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 67,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது, 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 77.8 சதவீத அதிகரிப்பாகும். தரவுகளின்படி, கைது செய்யப்பட்ட 67,900 பேரில் 35,765 பேர் ஹெரோய்ன் போதைப்பொருட்களுக்காகவும், 25,114 பேர் கஞ்சாவுக்காகவும், 6,728 பேர் ஐஸ் போதைப்பொருள் தொடர்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் 2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மொத்த அளவு 1,046 கிலோவாகும், நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் அளவு 10,214 கிலோவாகும், மேலும் 377 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் போதைப்பொருட்களின், சந்தை விலைகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஒரு மாத்திரையின் அளவு 500 ரூபா முதல் 1000 ரூபா வரையில் விற்பனையாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களின் தூய்மை அளவும் குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பாவனை - 10 மாதங்களில் கைதானோர் இத்தனை பேரா. ஐஸ் போதைப்பொருள் தொடர்பில், 2022 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 6,000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதே காலகட்டத்தில் 377 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை நாட்டில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டமை, தொடர்பில், 2022 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 67,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது, 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 77.8 சதவீத அதிகரிப்பாகும். தரவுகளின்படி, கைது செய்யப்பட்ட 67,900 பேரில் 35,765 பேர் ஹெரோய்ன் போதைப்பொருட்களுக்காகவும், 25,114 பேர் கஞ்சாவுக்காகவும், 6,728 பேர் ஐஸ் போதைப்பொருள் தொடர்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் 2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மொத்த அளவு 1,046 கிலோவாகும், நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் அளவு 10,214 கிலோவாகும், மேலும் 377 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இதேவேளை கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் போதைப்பொருட்களின், சந்தை விலைகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, ஒரு மாத்திரையின் அளவு 500 ரூபா முதல் 1000 ரூபா வரையில் விற்பனையாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களின் தூய்மை அளவும் குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement