முதுகெழும்பிருந்தால் பிரஜாசக்தி தொடர்பில் விவாதிக்க வாருங்கள் என சவால் விடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா அமைப்பாளர் எஸ் தவபாலன் தெரிவித்தார்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ஸ்ரீ ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருதது தெரிவித்த அவர்,
கடந்த கால அரசாங்கங்களை குற்றம் சாட்டி ஆட்சி பீடமேறிய இந்த என்பிபி குறிப்பாக தற்போதைய ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் மிக மோசமான அரசியலை ஒவ்வொரு இடங்களிலும் செயல்படுத்தி வருகின்றது.
கடந்த காலத்தில் தாங்கள் அரசாங்க செயல்பாடுகளின் மீது அதாவது அரச உத்தியோகஸ்தர்களுடைய செயல்பாடுகளின் மீது தாங்கள் ஆதிக்கம் செலுத்த மாட்டோம் அங்கே அரசியலை பிரயோகிக்க மாட்டோம் என்று சொல்லி ஆட்சி பிடமேறிய இந்த ஜேவிபி என்கின்ற என்பிபி எந்த ஒரு அரசாங்கமும் இலங்கை வரலாற்றிலே உட்புகுத்தாத முழு அரசியலை அரச உத்தியோகஸ்தர்களுடைய செயல்பாடுகள் மீது பிரயோகித்து வருகின்றது.
அது கட்டுமான பணிகளாக இருக்கலாம் அல்லது அபிவிருத்தி திட்டங்களாக இருக்கலாம் அல்லது முன்கொண்டு செல்லப்படுகின்ற எந்த விடயங்களாக இருந்தாலும் இந்த ஜேவிபியினுடைய அரசியல் முழுவதும் அங்கே நிறைந்து காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த ஜேவிபி என்று சொல்லப்படுகின்ற என்பிபி அரசாங்கத்தினால் இந்த 2025 ஆம் ஆண்டு பிரஜா சக்தி என்று சொல்லப்படுகின்ற கிராம மட்டத்திலே வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு அல்லது கிராம மட்டத்தினுடைய அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு ஒரு திட்டம் ஒன்றை முன்மொழிவு செய்யப்பட்டிருந்தது.
அதனுடைய சுற்றறிக்கை கூட வெளிவந்திருந்தது கடந்த அரசாங்கங்களை சுட்டிக்காட்டி கடந்த அரசாங்கங்கள் செய்யாத ஒரு நேர்மையானவர்கள் நீதியானவர்கள் பாகுபாடு இல்லாதவர்கள் எல்லா மக்களையும் சமத்துவமாக மதிக்கக் கூடியவர்கள் என்று சொல்லி இன்றைக்கு வாய்ச்சவடால் விட்டு வருகின்ற இந்த ஜேவிபி என்கின்ற இந்த என்பிபி அரசாங்கம் இந்த பிரஜா சக்தி என்று சொல்லப்படுகின்ற அது தேசிய மக்கள் சக்தியினுடைய குழு பிரஜா சக்தி குழு எல்லாம் தேசிய மக்கள் சக்தியினுடைய குழு என்றுதான் சொல்லலாம் கிராம மட்டத்திலே அவர்கள் உருவாக்கி வருகின்ற அல்லது உருவாக்கி உள்ள இந்த குழு முற்றுமுழுதாக அரசியல் நோக்கத்துக்காக தங்களுடைய அரசியல் நகர்வுகளுக்காக செயல்படுத்தப்பட்ட ஒரு குழு.
பல கவர்ச்சிகரமான வார்த்தைகள் கவர்ச்சிகரமான விடயங்கள் மக்களை வளப்படுத்துகின்ற பல செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டிருந்தது. நான் ஒரு அபிவிருத்தி அலுவலராக கிராம மட்டத்திலே கடமையாற்றி இருக்கின்றேன். ஒவ்வொரு காலகட்டத்திலேயும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் ஒவ்வொரு அரசாங்கத்தால் நடைபெற்ற சுற்றறிக்கைகள் வந்து தோல்வியுற்றதற்குரிய பிரதான காரணம் அங்கே முழுவதுமான அரசியல் தலையீடு அல்லது அரசியல் பிரசன்னம்.
அதைவிட மோசமான அரசியலைத்தான் மற்றவர்களை குற்றம் சாட்டி வந்த இந்த ஜேவிபி என்கின்ற என்பிபி செயல்படுத்தி வருகின்றது.
குறிப்பாக இந்த பிரஜா சக்தி என்கின்ற கிராம மட்டத்திலே தெரிவு செய்யப்படுகின்ற இந்த அமைப்பினுடைய தலைவரை நேரடியாக ஒரு கிராம ஒரு மாவட்ட அபிவிருத்தி குழுவினுடைய தலைவருடைய சிபாரிசின் பெயரில் தான் ஒவ்வொரு கிராம மட்டத்தில் தெரிவு செய்யப்படுகின்றார்.
ஒரு கிராமத்திலே ஒரு அபிவிருத்தி நடக்க வேண்டுமாக இருந்தால் கிராமத்திலே திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமாக இருந்தால் அல்லது வறுமை ஒழிக்கக்கூடிய மூலபாயங்கள் வகுக்கப்பட வேண்டுமாக இருந்தால் உண்மையிலே அங்கே கிராமத்திலே இருந்துதான் ஒரு தெரிவு இடம் பெற வேண்டும்.
ஆனால் மாறாக இந்த பிரஜா சக்தி குழுவினுடைய தலைவராக இருப்பவர் ஜேவிபிக்கு அல்லது என்பிபிக்கு நோட்டீஸ் ஒட்டினவராகவும் கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றவராகவும் இருக்கின்றார்.
அவர்களுக்கு சரியான கல்வி தரம் இருக்கின்றதா அல்லது கல்வி தகமையை தாண்டி கிராமத்தை வழிநடத்தக்கூடிய ஆற்றல் ஆளுமை தொடர்பாட்டுடன் தலைமைத்துவம் இருக்கின்றாரா என்று சொன்னால் ஒரு துளியளவும் இல்லாதவர்கள் தான் இன்றைக்கு அந்த கிராம மட்டத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதிலிருந்து எந்த ஒரு விடயத்தையும் முன்னேற்றகரமான செயல்பாட்டையும் இந்த அரசாங்கத்தால் செயல்படுத்த முடியாது என்பதுதான் எங்களுடைய கருத்து.
இந்த பிரஜாசக்தி என்ற அமைப்பு கொண்டு வந்ததனுடைய நோக்கம் கிராம மட்டத்திலே வறுமை ஒழிப்பதல்ல இவர்கள் கிராம மட்டத்திலே தங்களுடைய அரசியலை ஸ்திரப்படுத்துவதுதான் நாங்கள் சவால் விடுகின்றோம் இந்த பிரஜா சக்தியிலே அரசியல் இல்லை என்று சொல்லி சொன்னால் வவுனியா மாவட்டத்தை தாண்டியும் அல்லது வவுனியா மாவட்டத்திலே யாராவது என்பிபியினுடைய ஜேவிபியினுடைய பிரமுகர்கள் இருந்தால் பகிரங்கமாக நான் சவால் விடுகின்றேன் இந்த விடயங்கள் தொடர்பாக பகிரங்கமாக ஊடகங்களுக்கு முன்னால் விவாதிக்கிறதுக்கு தயாராக இருக்கின்றேன்.
முதுகெலும்பு இருந்தால் அவர்கள் இந்த ஊடகங்களுக்கு முன்னால் எங்களோடு விவாதிக்க வரட்டும். நாங்கள் அவர்களுக்கு தகுந்த மாதிரி இந்த பிரஜா சக்தி தொடர்பான விளக்கங்களையும் இந்த விளக்கங்களையும் தர தயாராக இருக்கிறோம். ஆகவே அவர்களை நான் முதுகெலும்பில் இருந்தால் நீங்கள் இந்த விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு வரவேண்டும் என்ற விடயத்தை பதிவு செய்து கொள்கின்றேன்.
முதுகெழும்பிருந்தால் பிரஜாசக்தி தொடர்பில் விவாதிக்க வாருங்கள் சவால்விடும் தவபாலன் முதுகெழும்பிருந்தால் பிரஜாசக்தி தொடர்பில் விவாதிக்க வாருங்கள் என சவால் விடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா அமைப்பாளர் எஸ் தவபாலன் தெரிவித்தார்.இன்று வவுனியாவில் இடம்பெற்ஸ்ரீ ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருதது தெரிவித்த அவர்,கடந்த கால அரசாங்கங்களை குற்றம் சாட்டி ஆட்சி பீடமேறிய இந்த என்பிபி குறிப்பாக தற்போதைய ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் மிக மோசமான அரசியலை ஒவ்வொரு இடங்களிலும் செயல்படுத்தி வருகின்றது.கடந்த காலத்தில் தாங்கள் அரசாங்க செயல்பாடுகளின் மீது அதாவது அரச உத்தியோகஸ்தர்களுடைய செயல்பாடுகளின் மீது தாங்கள் ஆதிக்கம் செலுத்த மாட்டோம் அங்கே அரசியலை பிரயோகிக்க மாட்டோம் என்று சொல்லி ஆட்சி பிடமேறிய இந்த ஜேவிபி என்கின்ற என்பிபி எந்த ஒரு அரசாங்கமும் இலங்கை வரலாற்றிலே உட்புகுத்தாத முழு அரசியலை அரச உத்தியோகஸ்தர்களுடைய செயல்பாடுகள் மீது பிரயோகித்து வருகின்றது.அது கட்டுமான பணிகளாக இருக்கலாம் அல்லது அபிவிருத்தி திட்டங்களாக இருக்கலாம் அல்லது முன்கொண்டு செல்லப்படுகின்ற எந்த விடயங்களாக இருந்தாலும் இந்த ஜேவிபியினுடைய அரசியல் முழுவதும் அங்கே நிறைந்து காணப்படுகின்றது.குறிப்பாக இந்த ஜேவிபி என்று சொல்லப்படுகின்ற என்பிபி அரசாங்கத்தினால் இந்த 2025 ஆம் ஆண்டு பிரஜா சக்தி என்று சொல்லப்படுகின்ற கிராம மட்டத்திலே வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு அல்லது கிராம மட்டத்தினுடைய அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு ஒரு திட்டம் ஒன்றை முன்மொழிவு செய்யப்பட்டிருந்தது. அதனுடைய சுற்றறிக்கை கூட வெளிவந்திருந்தது கடந்த அரசாங்கங்களை சுட்டிக்காட்டி கடந்த அரசாங்கங்கள் செய்யாத ஒரு நேர்மையானவர்கள் நீதியானவர்கள் பாகுபாடு இல்லாதவர்கள் எல்லா மக்களையும் சமத்துவமாக மதிக்கக் கூடியவர்கள் என்று சொல்லி இன்றைக்கு வாய்ச்சவடால் விட்டு வருகின்ற இந்த ஜேவிபி என்கின்ற இந்த என்பிபி அரசாங்கம் இந்த பிரஜா சக்தி என்று சொல்லப்படுகின்ற அது தேசிய மக்கள் சக்தியினுடைய குழு பிரஜா சக்தி குழு எல்லாம் தேசிய மக்கள் சக்தியினுடைய குழு என்றுதான் சொல்லலாம் கிராம மட்டத்திலே அவர்கள் உருவாக்கி வருகின்ற அல்லது உருவாக்கி உள்ள இந்த குழு முற்றுமுழுதாக அரசியல் நோக்கத்துக்காக தங்களுடைய அரசியல் நகர்வுகளுக்காக செயல்படுத்தப்பட்ட ஒரு குழு.பல கவர்ச்சிகரமான வார்த்தைகள் கவர்ச்சிகரமான விடயங்கள் மக்களை வளப்படுத்துகின்ற பல செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டிருந்தது. நான் ஒரு அபிவிருத்தி அலுவலராக கிராம மட்டத்திலே கடமையாற்றி இருக்கின்றேன். ஒவ்வொரு காலகட்டத்திலேயும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் ஒவ்வொரு அரசாங்கத்தால் நடைபெற்ற சுற்றறிக்கைகள் வந்து தோல்வியுற்றதற்குரிய பிரதான காரணம் அங்கே முழுவதுமான அரசியல் தலையீடு அல்லது அரசியல் பிரசன்னம்.அதைவிட மோசமான அரசியலைத்தான் மற்றவர்களை குற்றம் சாட்டி வந்த இந்த ஜேவிபி என்கின்ற என்பிபி செயல்படுத்தி வருகின்றது.குறிப்பாக இந்த பிரஜா சக்தி என்கின்ற கிராம மட்டத்திலே தெரிவு செய்யப்படுகின்ற இந்த அமைப்பினுடைய தலைவரை நேரடியாக ஒரு கிராம ஒரு மாவட்ட அபிவிருத்தி குழுவினுடைய தலைவருடைய சிபாரிசின் பெயரில் தான் ஒவ்வொரு கிராம மட்டத்தில் தெரிவு செய்யப்படுகின்றார்.ஒரு கிராமத்திலே ஒரு அபிவிருத்தி நடக்க வேண்டுமாக இருந்தால் கிராமத்திலே திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமாக இருந்தால் அல்லது வறுமை ஒழிக்கக்கூடிய மூலபாயங்கள் வகுக்கப்பட வேண்டுமாக இருந்தால் உண்மையிலே அங்கே கிராமத்திலே இருந்துதான் ஒரு தெரிவு இடம் பெற வேண்டும். ஆனால் மாறாக இந்த பிரஜா சக்தி குழுவினுடைய தலைவராக இருப்பவர் ஜேவிபிக்கு அல்லது என்பிபிக்கு நோட்டீஸ் ஒட்டினவராகவும் கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றவராகவும் இருக்கின்றார்.அவர்களுக்கு சரியான கல்வி தரம் இருக்கின்றதா அல்லது கல்வி தகமையை தாண்டி கிராமத்தை வழிநடத்தக்கூடிய ஆற்றல் ஆளுமை தொடர்பாட்டுடன் தலைமைத்துவம் இருக்கின்றாரா என்று சொன்னால் ஒரு துளியளவும் இல்லாதவர்கள் தான் இன்றைக்கு அந்த கிராம மட்டத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.இதிலிருந்து எந்த ஒரு விடயத்தையும் முன்னேற்றகரமான செயல்பாட்டையும் இந்த அரசாங்கத்தால் செயல்படுத்த முடியாது என்பதுதான் எங்களுடைய கருத்து.இந்த பிரஜாசக்தி என்ற அமைப்பு கொண்டு வந்ததனுடைய நோக்கம் கிராம மட்டத்திலே வறுமை ஒழிப்பதல்ல இவர்கள் கிராம மட்டத்திலே தங்களுடைய அரசியலை ஸ்திரப்படுத்துவதுதான் நாங்கள் சவால் விடுகின்றோம் இந்த பிரஜா சக்தியிலே அரசியல் இல்லை என்று சொல்லி சொன்னால் வவுனியா மாவட்டத்தை தாண்டியும் அல்லது வவுனியா மாவட்டத்திலே யாராவது என்பிபியினுடைய ஜேவிபியினுடைய பிரமுகர்கள் இருந்தால் பகிரங்கமாக நான் சவால் விடுகின்றேன் இந்த விடயங்கள் தொடர்பாக பகிரங்கமாக ஊடகங்களுக்கு முன்னால் விவாதிக்கிறதுக்கு தயாராக இருக்கின்றேன்.முதுகெலும்பு இருந்தால் அவர்கள் இந்த ஊடகங்களுக்கு முன்னால் எங்களோடு விவாதிக்க வரட்டும். நாங்கள் அவர்களுக்கு தகுந்த மாதிரி இந்த பிரஜா சக்தி தொடர்பான விளக்கங்களையும் இந்த விளக்கங்களையும் தர தயாராக இருக்கிறோம். ஆகவே அவர்களை நான் முதுகெலும்பில் இருந்தால் நீங்கள் இந்த விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு வரவேண்டும் என்ற விடயத்தை பதிவு செய்து கொள்கின்றேன்.