• Feb 08 2025

சட்டவிரோத டைனமைட் மீன்பிடியால் அழியும் மீன்கள் - தடை செய்யுமாறு கோரி போராட்டம்

Chithra / Feb 7th 2025, 2:42 pm
image



டைனமைட் பயன்படுத்தி மீன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் தமது மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாகவும்,

சட்டவிரோத டைனமைட் மீன்படி நடவடிக்கையை தடை செய்யுமாறு கோரி மூதூர் -இளக்கந்தை மீனவர்கள் இன்று   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மூதூர் -இளக்கந்தை கடற்கரையில் இன்று  காலை இடம்பெற்றது.

இதனை இளக்கந்தை மீனவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது சுலோகங்களை ஏந்தி, கோசங்கள் எழுப்பி கவனயீர்ப்பு போராட்டம் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

டைனமைட் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் மீன்கள் அழிவடைந்து செல்கின்றன.

இளக்கந்தை கிராமத்தில் 145 குடும்பங்கள் வாழ்கின்றனர். இதில் 125 குடும்பங்கள் முழுமையாக மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டவர்களாவர்.

எனினும் டைனமைட் பயன்படுத்துவதால் தமது வாழ்வாதார தொழில் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு டைனமைக் பயன்படுத்தி மீன்படி நடவடிக்கை மேற்கொள்வதை தடை செய்யுமாறு  மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


சட்டவிரோத டைனமைட் மீன்பிடியால் அழியும் மீன்கள் - தடை செய்யுமாறு கோரி போராட்டம் டைனமைட் பயன்படுத்தி மீன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் தமது மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாகவும்,சட்டவிரோத டைனமைட் மீன்படி நடவடிக்கையை தடை செய்யுமாறு கோரி மூதூர் -இளக்கந்தை மீனவர்கள் இன்று   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மூதூர் -இளக்கந்தை கடற்கரையில் இன்று  காலை இடம்பெற்றது.இதனை இளக்கந்தை மீனவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது சுலோகங்களை ஏந்தி, கோசங்கள் எழுப்பி கவனயீர்ப்பு போராட்டம் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டது.டைனமைட் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் மீன்கள் அழிவடைந்து செல்கின்றன.இளக்கந்தை கிராமத்தில் 145 குடும்பங்கள் வாழ்கின்றனர். இதில் 125 குடும்பங்கள் முழுமையாக மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டவர்களாவர்.எனினும் டைனமைட் பயன்படுத்துவதால் தமது வாழ்வாதார தொழில் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கின்றனர்.எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு டைனமைக் பயன்படுத்தி மீன்படி நடவடிக்கை மேற்கொள்வதை தடை செய்யுமாறு  மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement