• May 18 2024

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கை..! 15 இந்திய மீனவர்கள் விடுதலை..!samugammedia

Sharmi / Jul 21st 2023, 1:06 pm
image

Advertisement

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 15 பேரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 9ம் திகதி அதிகாலை நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 15 மீனவர்கள் இரு படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த 15 மீனவர்கள் இன்று ஊற்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன் போது 15 மீனவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த ஊற்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி  கஜநிதிபாலன் மீனவர்களை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு 18 மாதகால சாதாரண சிறைத் தண்டணை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து  மீனவர்கள் 15 பேரும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகிராகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திருப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவர்களை மெரிகானாவுக்கு அனுப்பி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் உத்தரவிட்டதுடன், படகுக்கான விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.


இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கை. 15 இந்திய மீனவர்கள் விடுதலை.samugammedia இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 15 பேரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 9ம் திகதி அதிகாலை நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 15 மீனவர்கள் இரு படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த 15 மீனவர்கள் இன்று ஊற்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.இதன் போது 15 மீனவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த ஊற்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி  கஜநிதிபாலன் மீனவர்களை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு 18 மாதகால சாதாரண சிறைத் தண்டணை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.இதனையடுத்து  மீனவர்கள் 15 பேரும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகிராகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திருப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இவர்களை மெரிகானாவுக்கு அனுப்பி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் உத்தரவிட்டதுடன், படகுக்கான விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement