நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் திம்புள்ள - பத்தன பொலிஸில் நேற்று மாலை சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தில் கொட்டகலை பகுதியை சேர்ந்த நபரொருவரே காயமடைந்துள்ளார்.
அவர் டிக்கோயா சிங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொட்டகலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை சட்டப்பூர்வமாக திருணம் செய்துள்ளார்.
எனினும், கொட்டகலை பகுதியை சேர்ந்த மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவை பேணி வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக தாக்குதலுக்கு இலக்கான பெண், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கணவர் ஆகியோர் நேற்று திம்புள்ள, பத்தன பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணையின்போது போலீஸ் முன்னிலையில், தனது மனைவியுடன் சமரசத்துக்கு வருவதாக கணவர் கூறியுள்ளார்.
வெளியே வந்த பிறகு சட்டத்துக்கு புறம்பான உறவை பேணும் பெண்ணுடன் இணைந்து கொட்டகலை பகுதியில் செல்பி படம் எடுத்துள்ளார்.
அதனை கண்ட, குறித்த நபரின் சட்டபூர்வமான மனைவியின் சகோதரன், அவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். மாமனாரால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் கொளுத்தியுள்ளார்.
அதன்பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
வெட்டு காயங்களுக்கு இலக்கான நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
கத்திக்குத்தில் முடிந்த கள்ளக்காதல்; மோட்டர் சைக்கிளும் தீக்கிரை நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் திம்புள்ள - பத்தன பொலிஸில் நேற்று மாலை சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.சம்பவத்தில் கொட்டகலை பகுதியை சேர்ந்த நபரொருவரே காயமடைந்துள்ளார்.அவர் டிக்கோயா சிங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.தாக்குதலுக்கு இலக்கான நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொட்டகலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை சட்டப்பூர்வமாக திருணம் செய்துள்ளார்.எனினும், கொட்டகலை பகுதியை சேர்ந்த மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவை பேணி வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக தாக்குதலுக்கு இலக்கான பெண், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கணவர் ஆகியோர் நேற்று திம்புள்ள, பத்தன பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.விசாரணையின்போது போலீஸ் முன்னிலையில், தனது மனைவியுடன் சமரசத்துக்கு வருவதாக கணவர் கூறியுள்ளார்.வெளியே வந்த பிறகு சட்டத்துக்கு புறம்பான உறவை பேணும் பெண்ணுடன் இணைந்து கொட்டகலை பகுதியில் செல்பி படம் எடுத்துள்ளார். அதனை கண்ட, குறித்த நபரின் சட்டபூர்வமான மனைவியின் சகோதரன், அவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். மாமனாரால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் கொளுத்தியுள்ளார்.அதன்பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.வெட்டு காயங்களுக்கு இலக்கான நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.