• Mar 17 2025

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள்; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர பணிப்புரை

Chithra / Mar 16th 2025, 10:14 am
image


கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ஆனால் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்க  நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக உற்பத்திக் கைத்தொழில்களை பயனுள்ளதாக முன்னெடுத்தல், ஒருங்கிணைத்தல்,  அபிவிருத்தி மற்றும்  அதனுடன் தொடர்புடைய சவால்கள் குறித்து  இதன்போது ஆராயப்பட்டது.  

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை  ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தின் ஆரம்ப முதலீடுகள்  மேற்கொள்ளல் மற்றும் அவற்றின் முறையான கண்காணிப்பு முதலீட்டு சபைகளை அண்டிய  உள்ளூர் சிறு அளவிலான கைத்தொழில்களை உருவாக்குதல் மற்றும்  சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் வணிகக் கடன்கள் தொடர்பான பிரச்சினைகள்  குறித்தும்  பரவலாக ஆராயப்பட்டது.

கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ஆனால் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள்; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர பணிப்புரை கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ஆனால் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்க  நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக உற்பத்திக் கைத்தொழில்களை பயனுள்ளதாக முன்னெடுத்தல், ஒருங்கிணைத்தல்,  அபிவிருத்தி மற்றும்  அதனுடன் தொடர்புடைய சவால்கள் குறித்து  இதன்போது ஆராயப்பட்டது.  சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை  ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தின் ஆரம்ப முதலீடுகள்  மேற்கொள்ளல் மற்றும் அவற்றின் முறையான கண்காணிப்பு முதலீட்டு சபைகளை அண்டிய  உள்ளூர் சிறு அளவிலான கைத்தொழில்களை உருவாக்குதல் மற்றும்  சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் வணிகக் கடன்கள் தொடர்பான பிரச்சினைகள்  குறித்தும்  பரவலாக ஆராயப்பட்டது.கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ஆனால் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement