• Jan 14 2025

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - திறக்கப்பட்ட தனிப் பிரிவு

Chithra / Jan 14th 2025, 11:32 am
image

 

இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டை பெறுவதற்கு பெருமளவான மக்கள் சுமார் 03 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக அமைச்சரிடம் முறையிடப்பட்டது.

இந்நிலையில் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால், கடவுச்சீட்டை பெறுவதற்கு தனியான பிரிவொன்று திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கவுண்டரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை சிறப்பு குழுவொன்று பரிசீலனை செய்து விரைவில் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - திறக்கப்பட்ட தனிப் பிரிவு  இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.கடவுச்சீட்டை பெறுவதற்கு பெருமளவான மக்கள் சுமார் 03 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக அமைச்சரிடம் முறையிடப்பட்டது.இந்நிலையில் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால், கடவுச்சீட்டை பெறுவதற்கு தனியான பிரிவொன்று திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அந்த கவுண்டரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை சிறப்பு குழுவொன்று பரிசீலனை செய்து விரைவில் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement