• May 18 2024

சாணக்கியனின் அலுவலகத்தில் முக்கிய கூட்டம் - சுமந்திரனின் கருத்து ஆராயப்படுமா.?

Sharmi / Jan 7th 2023, 4:08 pm
image

Advertisement

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக் கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் தேர்தல் காலத்தில் தனித்தனியாக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்துக்கு பங்காளிகட்சிகள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன.

அத்துடன் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கதிரைகளுக்காக பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிடபோவதில்லை என கருத்து வெளியிட்டிருந்தார்.

இன்றைய கூட்டத்திற்கு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், நிருவாகக் குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாணக்கியனின் அலுவலகத்தில் முக்கிய கூட்டம் - சுமந்திரனின் கருத்து ஆராயப்படுமா. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்று வருகின்றது.உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக் கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.அண்மையில் தேர்தல் காலத்தில் தனித்தனியாக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்துக்கு பங்காளிகட்சிகள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன.அத்துடன் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கதிரைகளுக்காக பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிடபோவதில்லை என கருத்து வெளியிட்டிருந்தார்.இன்றைய கூட்டத்திற்கு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், நிருவாகக் குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement