• Sep 08 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்னீர் மீன் புகைக்கருவாடு உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு! samugammedia

Tamil nila / Aug 22nd 2023, 9:23 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பலப்பெருமாள்குளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பு கட்டடம் மற்றும் நன்னீர் மீன் புகைக்கருவாடு உற்பத்தி நிலையம் திறப்பு விழா இன்று (22) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


உலக உணவுத்திட்டத்தின் நிதி அனுசரணையில் இந்த புகைக்கருவாடு உற்பத்தி நிலையமானது திறந்து வைக்கப்படுள்ளது.


நன்னீர் மீன்பிடி அதிகம் நடைபெறும் குளங்களில் ஒன்றான அம்பலப்பெருமாள் குளத்தின் நன்னீர் மீனவர்களின் நன்மை கருதி இந் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. 

குறித்த குளத்தில் பிடிக்கப்படுகின்ற  மீன்களை சந்தைப்படுத்த முடியாத சூழ்நிலையும் அதேநேரம் மிகக்குறைந்த விலையில் மீனைக் கொள்வனவு செய்யும் நிலமையும் காணப்படுவதால் இந்த புகைக்கருவாடு உற்பத்தி நிலையமானது நன்னீர் மீனவர்களுக்கு சிறந்த பயனை வழங்கும்.



இந்த கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்  மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஜெயபவாணி, துணுக்காய் பிரதேச செயலாளர் திருமதி லதுமீரா, உலக உணவுத்திட்டத்தின் செயற்றிட்ட பணிப்பாளர், மாந்தைகிழக்கு உதவித்திட்டமிடல் பணிப்பாளர் , நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், நன்னீர் மீனவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 


முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்னீர் மீன் புகைக்கருவாடு உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு samugammedia முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பலப்பெருமாள்குளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பு கட்டடம் மற்றும் நன்னீர் மீன் புகைக்கருவாடு உற்பத்தி நிலையம் திறப்பு விழா இன்று (22) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.உலக உணவுத்திட்டத்தின் நிதி அனுசரணையில் இந்த புகைக்கருவாடு உற்பத்தி நிலையமானது திறந்து வைக்கப்படுள்ளது.நன்னீர் மீன்பிடி அதிகம் நடைபெறும் குளங்களில் ஒன்றான அம்பலப்பெருமாள் குளத்தின் நன்னீர் மீனவர்களின் நன்மை கருதி இந் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் பிடிக்கப்படுகின்ற  மீன்களை சந்தைப்படுத்த முடியாத சூழ்நிலையும் அதேநேரம் மிகக்குறைந்த விலையில் மீனைக் கொள்வனவு செய்யும் நிலமையும் காணப்படுவதால் இந்த புகைக்கருவாடு உற்பத்தி நிலையமானது நன்னீர் மீனவர்களுக்கு சிறந்த பயனை வழங்கும்.இந்த கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்  மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஜெயபவாணி, துணுக்காய் பிரதேச செயலாளர் திருமதி லதுமீரா, உலக உணவுத்திட்டத்தின் செயற்றிட்ட பணிப்பாளர், மாந்தைகிழக்கு உதவித்திட்டமிடல் பணிப்பாளர் , நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், நன்னீர் மீனவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement