• Mar 17 2025

இலங்கையில் தனிநபரின் மாதாந்த செலவு அதிகரிப்பு!

Chithra / Mar 16th 2025, 3:06 pm
image

 

2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஜனவரி மாத உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் படி, செலவுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 2025 ஜனவரி மாதத்தில் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான தொகை 16,334 ரூபாவாகும்.

இது கடந்த ஆண்டு டிசம்பரில் 16,191 ரூபாவா பதிவு செய்யப்பட்டது.

தனிநபர் செலவீனங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதன் தொகை 17,617 ரூபாவாகும்.

தனிநபர் செலவீனத்தில் மிகக்குறைந்த மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது.

அங்கு தனிநபர் ஒருவர் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மாதாந்திர தொகை 15,780 ரூபாவாகும்.

இலங்கையில் தனிநபரின் மாதாந்த செலவு அதிகரிப்பு  2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஜனவரி மாத உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் படி, செலவுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, 2025 ஜனவரி மாதத்தில் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான தொகை 16,334 ரூபாவாகும்.இது கடந்த ஆண்டு டிசம்பரில் 16,191 ரூபாவா பதிவு செய்யப்பட்டது.தனிநபர் செலவீனங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதன் தொகை 17,617 ரூபாவாகும்.தனிநபர் செலவீனத்தில் மிகக்குறைந்த மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது.அங்கு தனிநபர் ஒருவர் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மாதாந்திர தொகை 15,780 ரூபாவாகும்.

Advertisement

Advertisement

Advertisement