• Nov 27 2024

அதிகரிக்கும் கொடுப்பனவு..! ஆசிரிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு

Chithra / Feb 20th 2024, 3:29 pm
image

 

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கல்வியற் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபா கடன் பெறுவதற்கான யோசனை ஒன்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கவில்லை.

இந்நிலையில், அவர்களுக்கான உணவுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் அதற்கு நிதிப் பற்றிய குழு அனுமதி வழங்கியதுடன், நேற்றைய தினம் அதனை உறுதிப்படுத்தியது.

இதற்கமைய, 8 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் கொடுப்பனவு. ஆசிரிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு  தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.கல்வியற் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபா கடன் பெறுவதற்கான யோசனை ஒன்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கவில்லை.இந்நிலையில், அவர்களுக்கான உணவுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.கடந்த வாரத்தில் அதற்கு நிதிப் பற்றிய குழு அனுமதி வழங்கியதுடன், நேற்றைய தினம் அதனை உறுதிப்படுத்தியது.இதற்கமைய, 8 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement